Published:Updated:

‘இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்’ - இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்’ - இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன
‘இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்’ - இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

‘இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்’ - இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அடுத்தமாதம் இந்தியா வருகிறார். 

இந்தியா-ரஷ்யா இடையிலான 19-வது கூட்டமைப்பு மாநாடு புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வர உள்ளார் புதின். அரசு முறைப் பயணமாக, வரும் அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்ய அதிபரின் வருகையை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் புதின், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், வர்த்தக மேம்பாடுகள், கச்சா எண்ணை இறக்குமதி, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையின் விளைவு உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகள் கலந்து ஆலோசிக்கப்படும் எனவும் கருதப்படுகிறது. அதோடு, இந்தியா-ரஷ்யா கூட்டாக இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகச் செயல்படும் விதத்தில் முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்கும் புதின், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் சந்திக்க உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு