Published:Updated:

வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கருணாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கருணாஸ்!
வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கருணாஸ்!

வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கருணாஸ்!

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது, காவல் துறை மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதுமட்டுமல்லாமல், மிரட்டல் விடுக்கும் விதத்திலும் அவரது பேச்சு அமைந்தது.  அதனால், அவர்மீது அ.தி.மு.க-வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். 

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதியன்று கருணாஸை போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர், அவர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக, சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில், ரசிகர்களைத் தாக்கியதற்காக, கருணாஸ்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. காவல் துறை மற்றும் முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, ஜாமீன் வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் மனுத் தாக்கல் செய்தார். நேற்று நடந்த வழக்கு விசாரணையில், இரண்டு வழக்குகளில் இருந்தும் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 30 நாள்களுக்கு கையெழுத்திட வேண்டும் என கருணாஸுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.  இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருந்து இன்று கருணாஸ் ஜாமீனில் வெளியேவந்தார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு