Published:Updated:

`திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார்!' - அமைச்சர் ஜெயக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார்!' - அமைச்சர் ஜெயக்குமார்
`திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார்!' - அமைச்சர் ஜெயக்குமார்

`திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார்!' - அமைச்சர் ஜெயக்குமார்

`விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தங்களுடன் நெருங்கி வருகிறார்' என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தையும் மிஞ்சும் வகையில் விழா நடைபெற்றது. அந்த வகையில், சென்னையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவுவிழா மிக எழுச்சியாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவில், 7 லட்சம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். தமிழகத்தில், இதுவரை நடைபெறாத நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவுவிழா நடக்க உள்ளது. உலகம் பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றவரிடம்,

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'விழா தொடர்பான எந்த அழைப்பும் வரவில்லை' என்று தெரிவித்துள்ளாரே, என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், `அனைவருக்குமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசு விழா. இரண்டாவது, கலையுலகத்தில் எம்.ஜி.ஆருடன் யாரெல்லாம் நெருக்கமாக இருந்தார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆகையால், கமல்ஹாசன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை. 

இது அரசு விழா என்பதால், கட்சி சார்பில் தனிப்பட்ட அழைப்பு விடுக்க முடியாது. தொல்.திருமாவளவன்கூட அழைப்பு விடுத்தால் வருவேன் என்று கூறினார். திருமாவளவனின் இந்த நிலைப்பாடு, தங்களுடன் அவர் நெருங்கி வருகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே, அவருக்கு எனது வாழ்த்துகள்' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு