Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பொலிட்டிகல் பொடிமாஸ்!

அம்மா கொடுத்த ரூ.10 ஆயிரம் கோடி!

ஞ்சாவூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம், டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜனவரி 31-ம் தேதி நடைபெற்றது. தினகரன் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடந்த அந்தக் கூட்டத்தில் கோட்டைப் பகுதிக் கழகச் செயலாளரான விருத்தாச்சலம் பேசுகையில், ‘‘முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூவரிடமும் தலா 10 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கச் சொல்லி ஜெயலலிதா கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை மூவரும் அப்படியே அமுக்கிவிட்டனர். அமைச்சராக ஆவதற்கு முன்பு பஸ்ஸில் செல்வதற்குக்கூட காசு இல்லாமல், ஓசியில்தான் வைத்திலிங்கம் செல்வார். இன்றைக்குக் கோயிலுக்குச் செல்ல ஒரு கார், மார்கெட்டில் கறியும் மீனும் வாங்க ஒரு கார் என அவருடைய வீட்டில் மொத்தம் எட்டு கார்கள் உள்ளன. எல்லாம், அம்மாவிடமிருந்து அமுக்கிய அந்த 10 ஆயிரம் கோடியில் வாங்கியவை. இப்போது, வைத்திலிங்கத்துக்கு தஞ்சையில் செல்வாக்கு இல்லை. எனவே, வட்டச் செயலாளருக்குப் பத்தாயிரம், வார்டு செயலாளருக்கு இரண்டாயிரம் எனக் கொடுத்துவருகிறார்” எனப் பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்க, அதை தங்க தமிழ்ச் செல்வன் ரசித்துக் கேட்டார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளாசிய மத்திய அமைச்சர்... அமைதி காத்த ராஜேந்திர பாலாஜி!

நா
ட்டில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களை வளர்ச்சியடையச் செய்யும் மத்திய அரசின் திட்டத்தில், 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப்பட்டியலில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் இந்த மாவட்டங்களில் அரசுத் திட்டங்களைக் கண்காணிக்க, தமிழ்நாட்டின் பொறுப்பாளராக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகரில் இதற்காக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க, ஜனவரி 30-ம் தேதி நிர்மலா சீ்தாராமன் விருதுநகர் வந்தார். தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் மாவட்டத்தின் நிலையைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் நிர்மலா. மாவட்ட அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளனர். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘உலக அளவில் தொழில் செய்வோர் இங்கு இருந்தும், இது மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இப்பகுதி மாணவர்களிடம் கற்றல் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. சுகாதார வசதிகள், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேரவில்லை. இதனால்தான் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் உள்ளது. இனிமேலும் அப்படி இருக்கக்கூடாது’’ என்றார். இதையெல்லாம் ராஜேந்திரபாலாஜி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் பொதுமக்களைப் போலவே தானும் ஒரு மனு கொடுத்தார்.

‘‘நிர்மலா சீதாராமன் மறைமுகமாகத் தமிழக அரசை விமர்சனம் செய்தார். இதைக் கேட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அமைதியாக இருந்தது தப்பு’’ என விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க-வினர் புலம்புகிறார்கள். இந்தக் கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

நேருவுக்கு மீண்டும் சோதனை!

மு
ன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்துக்குச் சொந்தமான அரிசி ஆலையில் வருமானவரித் துறை நடத்திய 32 மணி நேரச் சோதனை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள பூவாளூரில், நேருவின் தந்தை பெயரில் இயங்கிவரும் நாராயண ரெட்டியார் நவீன அரிசி ஆலை, 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஒரே நாளில் பல டன் நெல்லை அரிசியாக அரைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய நவீன ஆலை இது. கடந்த 2012-ம் ஆண்டு, இந்த ஆலை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்துப் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்பின் அந்த ஆலையின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 30-ம் தேதி, திருச்சி மண்டல வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் ஆல்பர்ட் மனோகர் தலைமையில் அதிகாரிகள் படை இங்கு சுமார் 32 மணி நேரம் சோதனை நடத்தியது. ஒரு கட்டத்தில் கொதித்த தி.மு.க-வினர் அங்கு திரண்டனர். அதனையடுத்து அங்கு வந்த நேரு அவர்களைக் கலைந்து செல்ல உத்தரவிட்டார். இந்த ஆலைக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்குக்கும், ஆலையின் வரவு செலவுக்கும் நிறைய வித்தியாசம் வந்ததால், சுமார் 3 பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆலை விவகாரம் நேருவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

அதிகாரிகள் கூட்டம் நடத்திய அமைச்சர் மகன்!

தர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சரான பாஸ்கரன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் மகன் பாலா, அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முறைப்படி தயாரித்த பட்டியல் அடிப்படையில் சத்துணவுப்பணியாளர்களை நியமிக்குமாறு மாவட்ட கலெக்டர் லதா கூறியிருக்கிறார். இந்நிலையில், சத்துணவுப் பணியாளர் நியமனக் குழுவின் கூட்டம் ஜனவரி 27-ம் தேதி நடந்தது. கூட்டத்துக்கு வந்த அதிகாரிகள், அங்கு கலெக்டர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். திட்ட இயக்குநர் காஞ்சனாவும் அங்கு இல்லை. விசாரித்தபோது, அமைச்சரின் மகன் பாலா உத்தரவின் பேரில் கலெக்டருக்குத் தெரியாமலே மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட அதிகாரி ஒருவரின் துணையுடன் அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. ‘‘நாங்கள் கொடுக்கும் பட்டியல்படிதான், நியமனம் நடக்க வேண்டும்’’ என்று பாலா நெருக்கடி கொடுக்க, ‘‘தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டும்தான் போஸ்டிங்’’ எனக் கறாராகச் சொல்லிவிட்டார் கலெக்டர். யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவில்லை.

- செ.சல்மான், சி.ஆனந்தகுமார், தெ.பாலமுருகன், கே.குணசீலன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஆர்.எம்.முத்துராஜ், ஈ.ஜெ.நந்தகுமார், நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism