Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

‘இந்தியா முழுக்க ஒரே தேர்வு’ என ‘நீட்’தேர்வை நீட்டி உயிர்களைப் பறித்தார்கள். ‘ஒரே வரி’ என ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள். இப்போது அடுத்தகட்டமாக ‘இந்தியா முழுக்க சட்டமன்றங்களுக்கு நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற முழக்கத்தை எழுப்புகிறார்கள். ‘அது எதுக்கு கொஞ்சம் கொஞ்சமா உடைச்சிக்கிட்டு? மொத்தமா பாம் வச்சு க்ளோஸ் பண்ணிடவேண்டியதுதானே’ என்ற கடுப்பில் சில ஐடியாக்கள் கொடுத்திருக்கிறோம்...

(பி.கு: வாரா வாரம் பி.ஜே.பி-யா என்ற உங்களின் சலிப்புப் புரிகிறது. என்ன செய்வது? ஒரு படத்தில் ‘ஒண்ணு தூங்குற... இல்ல தூர்வாருற’ என்பார்கள் வடிவேலுவைப் பார்த்து. அதேபோல, ‘ஒண்ணு டூர் போறீங்க, இல்ல திட்டம் போடுறீங்க’ என்றுதான் இவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது!

கம்பேரிஸன் கோவாலு!

• ஒரே கட்சி: ஏற்கெனவே தமிழகத்தில் அந்த நோக்கில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது காங்கிரஸ் வேறு ராகுலைத் தலைவராக அறிவித்து, இவர்களின் நோக்கத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. ஐ.டி ரெய்டு, ஆளுநர் ஆட்சி எனத் தமிழகத்தை முன்மாதிரியாக வைத்து இந்தியா முழுமைக்கும் ஒரே கட்சி ஆட்சியைக் கொண்டுவரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• தேசிய கீதத்துக்கு நீதிமன்றம் ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தோ கொஞ்சநஞ்ச ஆதரவையும் காலி செய்துவிட்டது. இந்தப் பஞ்சாயத்துகளெல்லாம் ஏன்? பேசாமல் இந்தியா முழுக்க ஒரே பாடல் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துவிடலாம்.

• ஒரே விவாத மேடை: நாட்டின் எந்த டி.வி-யில் விவாத நிகழ்ச்சிகள் நடந்தாலும், கிழித்துத் தொங்கவிடப்படுவது பி.ஜே.பி ஆர்வலர்கள்தான். எனவே, ‘இனி ஒரே விவாத மேடை’ என சம்ஸ்கிருதத்தில் நடத்தலாம். அதில் பேசவும் ஒரே ஒரு ஆள்தான். பி.ஜே.பி ஆதரவாளர், தாமரைப்பூக்களின் நலன் விரும்பி என விதவிதமாகப் பட்டங்களைக் கொடுத்து அவரையே பேச வைக்கலாம். யாரும் எதிர்த்துப் பேசமுடியாது பாருங்க!

• தேசிய மலராகத் தாமரை ஓகே. ஆனால், தேசிய விலங்குப் புலியாக இருக்கிறதே! இது ஆகாது. எனவே, தேசிய விலங்காகத் தாமரையில் நெளியும் தண்ணிப் பாம்பு, தேசியப் பறவையாகத் தாமரையில் தேன் குடிக்கும் சிட்டுக்குருவி ஆகியவற்றை அறிவிக்கலாம்.

• அம்மா பச்சை, கலைஞர் மஞ்சள், திராவிடக் கருப்பு, கம்யூனிஸ சிவப்பு... வாட் இஸ் திஸ் ஐ சே? இதெல்லாம் எவ்வளவு பெரிய குற்றம்? இனி தேசம் முழுக்க ஒரே கலர்தான். ஆரஞ்சு. எல்லாக் கட்டடங்களுக்கும் அதே கலர்தான். என்ன ஒன்று... இந்தப் பளீர் கூத்தில் பறவைகளுக்குக்கூட ஆரஞ்சு காமாலை வந்துவிடும். ஆனாலும் நோ காம்ப்ரமைஸ். ஒரே கொள்கை!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism