• ‘‘தேசியக் கட்சியான பி.ஜே.பி., தமிழகத்தில் நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.’’
• ‘‘மத்திய அமைச்சர்கள் கோட், சூட் போட்டிருப்பதைப் பார்த்தால், ஹோட்டல் வெயிட்டர்கள்போல தெரிகிறார்கள்.’’
• ‘‘சசிகலா தற்போது ஜெயிலில் இருப்பதற்கு எனக்கு நன்றி சொல்லவேண்டும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• ‘‘சசிகலாவைவிடவும் ரஜினிகாந்த் மோசமானவர்.’’

• ‘‘கமல்ஹாசன் என்ற முதுகெலும்பில்லாத கோழையைக் கடுமையாக எதிர்க்கிறேன்.’’
• ‘‘அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்.’’
• ‘‘தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் கட்டுமரத்தில் சென்று, இலங்கைக் கடற்படையுடன் சண்டையிட வேண்டும்.’’
• ‘‘சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு, அகில இந்திய பாரதிய ஜனதாவில் இருப்பவர்களுடன் தொடர்பு உண்டு.’’
• ‘‘ரஜினி சினிமாவில்தான் வீரர்... பொதுவாழ்வில் பயந்தாங்கொள்ளி.’’
• ‘‘விரைவில் தமிழக அரசு கவிழும். அதன்பின் தினகரன் முதல்வராகி விடுவார்.’’
• ‘‘பி.ஜே.பி-யினர் மது குடிக்கக்கூடாது என்று கட்சித் தலைமை உத்தரவிட வேண்டும்.’’
• ‘‘அருண் ஜெட்லியைவிட சிறந்த நிதியமைச்சராக என்னால் செயல்பட முடியும்.’’
• ‘‘ரஜினியுடன் பி.ஜே.பி கூட்டணி வைத்தால், நான் வேறு மாநிலத்துக்குச் செல்வேன்.’’
• ‘‘அரசியலுக்கு வரவேண்டுமென்றால், கொஞ்சமாவது பொது அறிவு வேண்டும்; ரஜினிக்கு அது கிடையாது.’’
• ‘‘தமிழ்நாட்டிலிருந்து காமராஜருக்குப் பிறகு நான் மட்டும்தான் ஆல் இந்தியா லீடர்.’’
• ‘‘தி.மு.க மோசமான கட்சி. அவர்களை வளரவிடமாட்டேன்.’’
- த.கதிரவன்
ஓவியம்: நெடுமாறன்