Published:Updated:

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

Published:Updated:
ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ‘‘இந்த பினாமி ஆட்சி கவிழ்ந்து சட்டமன்றத் தேர்தலும் விரைவில் நடக்கும்’’ என்கிறார் தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலும் முன்கூட்டியே வருவதற்கான அறிகுறிகள் டெல்லியில் தென்படுகின்றன. இந்தத் தேர்தல்களை எதிர்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறதா? ‘கலகம் பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். ‘ஸ்டாலின் நடத்தும் கள ஆய்வால் கழகத்துக்கு வழி பிறக்குமா?’ என்ற ஆர்வத்துடன் அறிவாலயத்தில் தினந்தோறும் முகாமிடுகிறார்கள் தி.மு.க-வின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள்.

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட்டே பறிபோன பரிதாபம், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி அரசியலால் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சோர்வு என நெருக்கடிகளும் விமர்சனங்களும் ஸ்டாலினைச் சூழ்ந்துள்ளன. இதை முடிவுக்குக் கொண்டுவர, ‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ நிகழ்ச்சியை அறிவித்தார் ஸ்டாலின். பிப்ரவரி 1-ம் தேதி துவங்கியுள்ள இந்த ஆய்வுக்கூட்டம், தினமும் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் என 32 நாள்கள் தொடர்கிறது. ஒரு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரை தி.மு.க-வின் அனைத்து நிர்வாகிகளையும் இதற்கு அழைக்கிறார்கள். மேடையின் இரு பக்கங்களிலும் ‘தீர்வு காணும் பெட்டி’ என்ற பெயரில் புகார் பெட்டி வைத்துள்ளார்கள்.  

‘‘2005-ம் ஆண்டு கருணாநிதி இதேபோன்ற ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போதுகூட, இப்படிப் புகார் பெட்டி ஏதும் வைக்கவில்லை. இந்த ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு கட்சியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்’’ என்கிறார் மூத்த நிர்வாகி ஒருவர்.

அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதுவும் அழைப்புக் கடிதங்களும் ஒரு வாரத்துக்கு முன்பே தலைமைக் கழகத்திலிருந்து மாவட்டச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு விட்டன. மாவட்டச் செயலாளர், சம்பந்தப்பட்ட நிர்வாகியிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அழைப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார். அழைப்புக் கடிதம் இருந்தால் மட்டுமே அரங்குக்குள் அனுமதி. எல்லோருக்கும் கழுத்தில் அடையாள அட்டையை மாட்டி உள்ளே  அனுப்புகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

முதலில் ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகளுடனும், அதன்பிறகு சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனும், இறுதியாக மாவட்ட நிர்வாகிகளுடனும் உரையாடுகிறார் ஸ்டாலின். முதல் நாள் ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாநகரம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார் ஸ்டாலின். பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர். மற்றவர்கள், உரையாற்றிய பிறகு சென்றுவிட்டனர். அதன்பிறகு கலந்தாய்வுக் கூட்டத்தை ஸ்டாலின் மட்டுமே நடத்தினார். கூட்ட அரங்கின் ஒரு பகுதியில் அன்பில் மகேஷ், அன்பகம் கலை ஆகியோர் மட்டுமே நின்றிருந்தனர். வேறு யாருக்கும் கூட்ட அரங்கினுள் அனுமதி கிடையாது.

கூட்டத்தில் பங்கேற்பவர்களின் பெயர்ப் பட்டியல் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர் முன்னுரை ஆற்றிவிட்டு, பட்டியலைப் பார்த்து அவராகவே சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, பேச அழைக்கிறார். அவர்களிடம் மைக் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஐந்து நிமிடங்கள் பேச வாய்ப்புத் தரப்படுகிறது. அதிக பட்சமாக 20 நபர்களை அனுமதிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை ஸ்டாலின் நோட்ஸ் எடுத்துக்கொள்கிறார். ‘‘இங்கு பேச முடியாதவர்கள், உங்கள் கருத்துகளைத் தீர்வு காணும் பெட்டியில் போடுங்கள். அவற்றைக் கண்டிப்பாக நான் படிப்பேன்’’ என உத்தரவாதம் கொடுக்கிறார் ஸ்டாலின். கீழ்மட்ட நிர்வாகிகள் பெரும்பாலும் மாவட்ட நிர்வாகிகள் மீது புகார் தெரிவிக்கின்றனர். இறுதியாக மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கும் போது, அவர்களிடம் இதைக் குறிப்பிட்டு ஸ்டாலின் கேள்வி கேட்பதால், மாவட்ட நிர்வாகிகளுக்குச் சிக்கலாகி விடுகிறது.

ஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி?

‘‘நமக்கு நாமே பயணத்தில் மக்களை நேரடி யாகச் சந்தித்தார் ஸ்டாலின். இப்போது கள ஆய்வு மூலம் அடிமட்டத் தொண்டர்களையும் அவர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற நடைமுறையை தி.மு.க மட்டுமே மேற்கொண்டுள்ளது’’ என்கிறார் தி.மு.க-வை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இந்தக் கள ஆய்வு குறித்த எதிர்மறை கருத்துகளும் தி.மு.க-வினரிடம் உள்ளது. ‘‘கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள். இவர்களில் பலரின் செயல்பாடுதான், கட்சியின் குறையே! இதை இவர்களே எப்படிச் சொல் வார்கள்? முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், தேர்தல்களில் தோற்றவர்கள் போன்றவர்களின் கருத்தும் முக்கியம் அல்லவா?’’ என்கிறார்கள் அவர்கள்.

இப்போது மாவட்டச் செயலாளருக்கு எதிர்க் கோஷ்டியினர் பலர் இந்தக் கள ஆய்வில் கலந்து கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் புகார் கடிதத்தை மட்டும் கொடுத்தனுப்பி பெட்டியில் போட வைத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் ஆய்வு முடிந்ததும், பெட்டியில் உள்ள கடிதங்கள் எடுக்கப்படு கின்றன. அன்பகம் கலைக்கு, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது. 

தி.மு.க-வின் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமா பெட்டி? 

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism