Published:Updated:

சுதாகரன் மீதான போதை பொருள் வழக்கில் 19ல் தீர்ப்பு

சுதாகரன் மீதான போதை பொருள் வழக்கில் 19ல் தீர்ப்பு
சுதாகரன் மீதான போதை பொருள் வழக்கில் 19ல் தீர்ப்பு
சுதாகரன் மீதான போதை பொருள் வழக்கில் 19ல் தீர்ப்பு

சென்னை: ஹெராயின் வைத்திருந்ததாக முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதான வழக்கின் வரும் 19ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் 2001ஆம் ஆண்டு கோபுஸ்ரீ என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக தியாகராய நகரில் உள்ள சுதாகரன் வீட்டை சோதனை செய்தபோது, அவரது படுக்கையறையில் 16 கிராம் ஹெராயின் இருந்தது.

இதையடுத்து சுதாகரன் மீது ஹெராயின் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள சுதாகரனின் நண்பர் தோட்டம் பாஸ்கரன் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு 72 கிராம் ஹெராயின் இருந்தது.

இதையடுத்து, அபிராமபுரம் போலீசார், சுதாகரன், தோட்டம் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த 2 வழக்குகளிலும் சுதாகரன், அவரது நண்பர்கள் மொய்னுதீன், தோட்டம் பாஸ்கரன், சலாவூதீன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

##~~##
இந்த 2 வழக்குகளும் சென்னையிலுள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சலாவூதீன் தலைமறைவாகிவிட்டதால் அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.
சுதாகரன் உட்பட 3 பேர் மீதான 2 வழக்குகளையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 16 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.ராமமூர்த்தி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று இறுதிக்கட்ட வக்கீல் வாதத்துக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், ஆர்.அன்புக்கரசு ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி.ராமமூர்த்தி, வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.