Published:Updated:

`பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம்'- கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்

`பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம்'- கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
`பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம்'- கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்

`பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம்'- கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பதற்கும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கும் தடை விதித்து மண் மற்றும் மக்களின் நலன் காக்கும் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி வணிகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கிராம மக்களை அனைவரும் பாராட்டி வருவதோடு அப்பகுதி வணிகர்களை பெருமை பொங்க வாழ்த்தியும் வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதே போல் கும்பகோணம் அருகே எஸ்.புதூர் கிராமத்தில் தனி அலுவலர் உமா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் எங்கள் கிராமத்தில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் நடைபெற்றது. மண்ணைக் காக்கவும் மக்களைக் காக்கவுமே இந்தச் சிறப்புமிக்க தீர்மானத்தைப் போட்டதாகக் கூறுகிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள். இது குறித்து சிலரிடம் பேசினோம். ``எங்க கிராமத்தில் வணிகர் சங்கத்தினர் ஒன்று கூடி பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பது இல்லை. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது இல்லை என முடிவு செய்ததோடு அதன்படியே செயல்பட்டனர். ஆனால், மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வந்தனர். யார் எப்படி போனா என்ன நமக்கு லாபம் கிடைச்சாப் போதும் எனப் பலர் செயல்படும் இந்தக் காலத்தில் எங்களுக்கு லாபமே வேண்டாம். ஆனால், பன்னாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் எனக் கூறியதோடு மாறாக உள் நாட்டில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை விற்று வந்தனர்.

அதேபோல் பிளாஸ்டிக் பொருள்களையும் சுத்தமாகப் பயன்படுத்தாமல் இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் வணிகர்களின் உறுதித் தன்மைக்குச் சிறப்பு சேர்க்கும் வகையிலும் மேலும் இவை தமிழகம் முழுக்க பரவி மக்கள் பயன்பெறவே ஏகமனதாக இதுபோன்ற தீர்மானத்தைப் போட்டுள்ளோம்'' என்றனர்.

வணிகர் சங்க நிர்வாகி செல்வம் என்பவரிடம் பேசினோம். ``எங்க ஊரில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாங்க அனைவரும் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பது இல்லை. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது இல்லை என முடிவெடுத்ததோடு அதன் படியே இரண்டு வருடங்களாகச் செயல்பட்டு வருகிறோம். பன்னாட்டு குளிர்பான கம்பெனிகள் நீங்க காசே தர வேண்டாம் எங்க குளிர்பானத்தை விற்பனை செய்யுங்கள் என்பார்கள். அதோடு பிரிட்ஜையும் எங்களுக்குக் கொடுக்கிறோம் என்பார்கள். இவை எதற்கும் ஆசைப்படாமல் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதற்காக பல பாராட்டுகளையும் பெற்றோம். மண் நல்லா இருக்கணும் என்பதாலும் உள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை விற்க வேண்டும். அப்பதான் நம்ம வணிகர்களின் வாழ்க்கை மேம்படும் என்பதாலேயே இந்த முடிவு எடுத்து செயல்பட்டோம். இப்போது மக்களே எங்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதே எங்களது லட்சியம்'' என்றார்.
 

அடுத்த கட்டுரைக்கு