அணு உலை அரசியல்

கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதில், அந்தப் பகுதியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இன்பதுரை, ‘‘கூடங்குளம் அணுமின் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் ஒருவர், கேரள எல்லைப் பகுதியில் மனிதவள நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர்களை அணு உலைக்கான பணிகளில் சேர்த்துப் பணம் சம்பாதிக்கிறார்’’ எனக் குற்றம் சாட்டினார். அத்துடன், ‘‘கூடங்குளத்தில் அணுமின் திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களில் எத்தனை பேருக்கு அங்கு வேலை தரப்பட்டுள்ளது? அணு உலைக்கு நிலம் கொடுத்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலைமை தொடருமானால், நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்’’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதனிடையே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அணு உலை வளாகம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு அறிவித்தார். இந்த அணு உலை அரசியல், நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மெஜாரிட்டி அரசா?

தமிழகத்தின் முழுநேர கவர்னராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ஒவ்வொரு ஊருக்கும் ஆய்வுக்குச் செல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கேட்டு கவர்னரின் அலுவலகமான ராஜ் பவனுக்கு மனு அனுப்பினார் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ்.

பன்வாரிலால் புரோஹித் கவர்னராகப் பதவியேற்றபோது செய்யப்பட்ட செலவினங்கள் என்ன?

கவர்னராகப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் மேற்கொண்ட சுற்றுப்பயண விவரம் மற்றும் அதற்கான செலவின விவரம் என்ன?

தமிழக அரசின் துறைகளை ஆய்வுசெய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? அவ்வாறு அதிகாரம் இருப்பின், அப்படி அதிகாரம் வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவின் நகல்களை வழங்கவும்.

தற்போதைய தமிழக அமைச்சரவை மெஜாரிட்டியுடன் கூடிய அரசா அல்லது மைனாரிட்டி அரசா?

இந்த நான்கு கேள்விகளை டேனியல் ஏசுதாஸ் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த கவர்னரின் சார்புச் செயலாளர், ‘மூன்று மற்றும் நான்காம் கேள்விகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ‘தகவல்’ எனும் வரையறைக்குள் அடங்காது’ என்று பதிலளித்துள்ளார். ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கேள்விகளுக்கும் பதில் தரவில்லை.

இதுகுறித்து டேனியல் நம்மிடம், ‘‘கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், ஆய்வு செய்ய அவருக்கு உண்மையாகவே அதிகாரம் உள்ளதா என்று அறியவே இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தேன். இத்தனை ஆய்வுகளை மேற்கொள்ளும் கவர்னர், ஏதாவது தவறுகளைக் கண்டுபிடித்ததாகவோ அல்லது நடவடிக்கை எடுத்ததாகவோ தகவல் இல்லை. நான் பிரதமர்களின் சுற்றுப்பயணங்களுக்கு ஆன செலவின விவரங்களையே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கியுள்ளேன். இவர்கள் தங்களது தவறுகளை மூடி மறைக்கவே, எந்தப் பதிலையும் அளிக்காமல் தவிர்க்கின்றனர். இதை நான் விடமாட்டேன்’’ என்றார்.

10 மணி பதற்றம்

தினகரன் அணியினர், கோவையில் நீண்ட நாள்களாகக் கூட்டம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. “அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சைக் கேட்டுத்தான், அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்” என்று தினகரனே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி, கோவை முன்னாள் துணைமேயர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனுமதி பெறவில்லை என்று சொல்லி, அந்தக் கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீஸார் அகற்றினர். பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்கவில்லை. கூட்டத்துக்கு 10 மணிவரைதான் அனுமதி. ‘ஒரு நிமிடம் கூடுதலாக கூட்டம் நடந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுங்கள்’ என போலீஸாருக்கு உத்தரவு பிறக்கப்பட்டதாக தகவல் வந்ததால், 10 மணியை நெருங்கியதும் தினகரன் ஆதரவாளர்களிடம் பதற்றம் அதிகரித்தது. கடைசியாகப் பேசிய நாஞ்சில் சம்பத்திடம், பலமுறை நேரம் குறித்து அலெர்ட் செய்யப்பட்டது. “போலீஸாரின் அனுமதியை மீறி கூட்டம் நடத்துவோம்” என்று ஆரம்பத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், கடைசியில், “போலீஸ் கொடுத்த காலம் முடிந்துவிட்டது. நன்றி வணக்கம்” எனச் சரியாக 10 மணிக்குப் பேசிமுடித்தார்.

விளக்கம்!

சீர்காழி ஸ்ரீசட்டைநாதசுவாமி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் கே.வெங்கட்ராம சிவாச்சாரியார், கடிதம் ஒன்றை நமக்கு அனுப்பியுள்ளார். அதில், “31.01.2018 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘தப்பிக்க வைப்பாரா சட்டைநாதர்?’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. அதில், என் கருத்தும் இடம்பெற்றிருந்தது. நான் ஸ்ரீசட்டைநாத சுவாமியின் தல வரலாறு மற்றும் அவதாரச் சிறப்பு பற்றி மட்டுமே ஜூ.வி நிருபரிடம் கூறினேன். தனிப்பட்ட நபர்கள் குறித்தோ, ‘தப்பு செய்த விஷ்ணுவையே தண்டித்தவர் சட்டைநாதர்’ என்றோ, வேறு எவ்விதத் தகவலையோ நான் தெரிவிக்க வில்லை” என்று கூறியிருக்கிறார்.

- ஆண்டனிராஜ், இரா.குருபிரசாத்
படங்கள்: எல்.ராஜேந்திரன், க.விக்னேஸ்வரன்