Published:Updated:

`ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்குங்கள்!' - சட்டப்பேரவைச் செயலாளரிடம் கருணாஸ் மனு

கலிலுல்லா.ச
`ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்குங்கள்!' - சட்டப்பேரவைச் செயலாளரிடம் கருணாஸ் மனு
`ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்குங்கள்!' - சட்டப்பேரவைச் செயலாளரிடம் கருணாஸ் மனு

சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நீக்கக்கோரி, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், சட்டமன்றச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாஸ். சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கருணாஸ், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சபாநாயகரை நீக்கக்கோரி, கருணாஸ் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சட்டமன்ற விதி 69-ன்படி அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவை தலைவர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் இன்று அதிகாலை நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.