Published:Updated:

`நாங்கள் இல்லையெனில் உங்கள் பதவி காலி!’ - மன்னர் சல்மானை எச்சரித்த ட்ரம்ப்

`நாங்கள் இல்லையெனில் உங்கள் பதவி காலி!’ - மன்னர் சல்மானை எச்சரித்த ட்ரம்ப்
`நாங்கள் இல்லையெனில் உங்கள் பதவி காலி!’ - மன்னர் சல்மானை எச்சரித்த ட்ரம்ப்

``நாங்கள் இல்லையென்றால் சவுதி அரேபியா என்கிற நாடே இருக்காது'' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கும் விதத்தில் பேசியுள்ளார். 

பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முக்கியமானது. அதேபோல் இரான் நாடும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடு. அணு ஆயுத விவகாரத்தில் இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இரானிலிருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை. இரானின் உற்பத்தி இழப்பை ஈடு செய்யும் வகையில் சவுதி அரேபியா, ரஷ்யா போன்ற நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு சவுதி செவி சாய்க்க மறுத்தது..

இந்நிலையில் மிசிஸிபி நகரில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற ட்ரம்ப், ''அமெரிக்க ராணுவம் இல்லையென்றால் சவுதி அரேபியா என்ற நாடே இருக்காது. அந்த நாட்டு ராணுவத்தால் மட்டும் சவுதியைப் பாதுகாத்துவிட முடியாது. சவுதி அரேபியாவை அமெரிக்க ராணுவம்தான் பாதுகாக்கிறது. சவுதி மன்னர் சல்மான் எனக்கு நல்ல நண்பர்தான். அமெரிக்கப் படைகள் இல்லையென்றால் மன்னர் சல்மானால் 2 வாரங்களுக்குக்கூட பதவியில் இருக்க முடியாது. நீண்ட காலமாக சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா நட்பு பாராட்டி வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய் விஷயத்தில் மாறுபட்ட முடிவை எடுப்பது கவலை தந்துள்ளது'' என்று பேசினார். 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் சவுதி அரேபியாவுக்கும் சென்று வந்தார். அதே வேளையில், டொனால்டு ட்ரம்ப் நெருங்கிய நட்பு நாடுகளையும் கடும் வார்த்தைகளால் எச்சரிப்பதாகச் சொல்லப்படுகிறது.