Published:Updated:

நிதிஷ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற பா.ஜனதா முடிவு!

விகடன் விமர்சனக்குழு
நிதிஷ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற பா.ஜனதா முடிவு!
நிதிஷ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற பா.ஜனதா முடிவு!
நிதிஷ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற பா.ஜனதா முடிவு!

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஏற்க மறுப்பதால், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்த பின்னர் பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ் குமாருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயாராகி வருகிறது.ஆனால் அவரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மேலும் டெல்லியில் அண்மையில் நடந்த அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இந்த ஆண்டுக்குள் பிரதமர் வேட்பாளரை பா.ஜனதா அறிவிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நிதிஷ் குமார் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் மோடியை விமர்சிப்பதும், அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுப்பதும் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனிடையே பீகார் மாநில பா.ஜனதாவினரும், ஐக்கிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளுமாறு கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

##~~##
இதனால் வருகிற மே மாதம் நடைபெறும் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், பீகாரில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகார் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 243 உறுப்பினர்களில் 120 பேர் ஐக்கிய ஜனதா தள அரசை ஆதரிக்கின்றனர். மேலும் தற்போது தேர்தலை விரும்பாத சில கட்சிகளும் அரசை ஆதரிக்கும் என்பதால் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.