Published:Updated:

பெங்களூரில் பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!

பெங்களூரில் பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!
பெங்களூரில் பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!

பெங்களூர்: பெங்களூரில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே குண்டு வெடித்ததால் 16 பேர் காயமடைந்தனர்.

##~~##
இன்று காலை பெங்களூர், மல்லேஸ்வரம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி வேன் வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் 8 பேர் போலீசார் என தெரியவந்துள்ளது.
பெங்களூரில் பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!

முதலில் மாருதி வேனில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததாலேயே, கார்களும் சேர்ந்து வெடித்ததாக கூறப்படுகிறது.

பெங்களூரில் பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!
பெங்களூரில் பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!

இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் நகர காவல் ஆணையர் ராகவேந்திரா ஔரத்கர், இது குண்டு வெடிப்பாகவே தோன்றுகிறது என்றார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பா.ஜ.க. அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் குண்டுவெடிப்பு

இதனிடையே முதல் வெடிகுண்டு வெடித்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் பெங்களூரின் ஹெப்பால் என்ற இடத்தில் குண்டு வெடித்துள்ளது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

ஐஇடி ( IED) எனப்படும் சக்திவாய்ந்த குண்டு இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், பா.ஜனதா அலுவலகத்தை குறிவைத்தே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை

குண்டு வெடிப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சில தடயங்களை கைப்பற்றினர். இது குறித்து தற்போது, தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது. வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தமிழக பதிவு எண்ணுடன் இருந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்களில் 2 பேரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ந்திய முஜாகிதீனுக்கு தொடர்பு?

இதனிடையே இந்த குண்டுவெடிப்பில் இந்திய முஜாகிதீன் இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.


 

-இரா.வினோத்

படங்கள்: நா. வசந்த குமார்