சமூகம்
Published:Updated:

ஓ.எஸ். மணியன் பொன்மொழிகள்

ஓ.எஸ். மணியன் பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.எஸ். மணியன் பொன்மொழிகள்

ஓ.எஸ். மணியன் பொன்மொழிகள்

‘‘முதல்வர் பதவி நாற்காலி எந்தக் கடையில் விற்கிறது என்பது தெரிந்தால், அதை நானே ஸ்டாலினுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவேன்.’’

‘‘பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி காஷ்மீர் போய்வருவதால்தான், ‘தமிழகமும் தீவிரவாதிகளின் பயிற்சி மையமாக மாறியிருக்கிறது’ என்று பேசியிருக்கிறார்.’’

‘‘ஆர்.கே. நகரில் மீண்டும் இடைத்தேர்தல் வராமல், டி.டி.வி.தினகரன் பார்த்துக்கொண்டால் மகிழ்ச்சி!’’ 

‘‘கமல்ஹாசன் முதலில் புரிகிற மாதிரி தமிழில் பேசட்டும்... அதற்குப் பிறகு நாங்கள் கருத்துச் சொல்கிறோம்.’’

‘‘சொன்னால் உயிர்போய்விடும்; சொல்லாவிடில் தலை போய்விடும் என்ற நிலைமையில்தான் அரசியல்வாதிகளாகிய நாங்கள் இருக்கிறோம்.’’

‘‘ஆளுநர் வரும்போது மழை பெய்ததை நல்ல சகுனமாகப் பார்க்கிறோம்.’’

ஓ.எஸ். மணியன் பொன்மொழிகள்

‘‘அ.தி.மு.க-வில் இருக்கும் பிரச்னைகள் ஒரே நாளில் சரியாகிவிடாது.’’

‘‘ஆர்.கே. நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றதற்கு நாங்களே காரணம்.’’

‘‘தொடர்ந்து ஐந்து வருடம் மைனாரிட்டி ஆட்சி நடத்திய கருணாநிதியைப் பார்த்து, ‘சூடு இருக்கிறதா, சொரணை இருக்கிறதா’ என்று ஸ்டாலின் முதலில் கேட்கட்டும்.’’

‘‘அ.தி.மு.க ஆட்சி டெங்கு ஆட்சி என்றால், தி.மு.க ஆட்சி எய்ட்ஸ் ஆட்சி!’’

‘‘தலைவராக வேண்டுமென்றால், முதலில் மனைவிக்கு நல்ல கணவராக இருக்க வேண்டும்.’’

‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால், அது நோபல் பரிசுக்கே கிடைக்கும் பெருமை!’’

‘சிறையில் ஜெயலலிதா இருந்திருந்தால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரையும் நீக்கியிருப்போம்.’’

‘‘கா
விரி தீர்ப்பை வரவேற்கும் ரஜினிகாந்த், ‘உடனடியாகக் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்று சொல்வாரா?’’

‘‘மு.
க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எந்தத் தேர்தலிலும் ஜெயிக்காது என்று ஸ்டாலினைச் சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார், அவரின் சகோதரர் மு.க.அழகிரி.’’

- த.கதிரவன்,  ஓவியம்: நெடுமாறன்