Published:Updated:

பிரதமர் வேட்பாளர்: பா.ஜ.வுக்கு சிவசேனாவும் நெருக்கடி!

பிரதமர் வேட்பாளர்: பா.ஜ.வுக்கு சிவசேனாவும் நெருக்கடி!
பிரதமர் வேட்பாளர்: பா.ஜ.வுக்கு சிவசேனாவும் நெருக்கடி!
பிரதமர் வேட்பாளர்: பா.ஜ.வுக்கு சிவசேனாவும் நெருக்கடி!

மும்பை: பிரதமர் யார் என்பதை இப்பொழுதுதே அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடர்ந்து சிவசேனா கட்சியும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது:

" தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விரைவாக கூட்டி, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக அறிவித்தால், பா. ஜனதா கூடுதலாக 5ல் இருந்து 10 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பழைய நட்பு கட்சிகள் விலகினால் 25 தொகுதிகளை இழக்க வேண்டியது இருக்கும்.

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதை பா.ஜனதா கவனிக்க வேண்டும். அதே சமயம் 2002 ல் நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்கு மோடியை குற்றம் சாட்ட முடியாது.மோடி இடத்தில் வேறு யாராவது இருந்தால், அங்கு கலவரம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கும்"  என்று கூறப்பட்டுள்ளது.

##~~##
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி,  ஏற்கனவே மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தற்போதே அறிவிக்க வேண்டும் என பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் சிவசேனாவும்  பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வலியுறுத்தி உள்ளடு பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.