Published:Updated:

பெ.ம.க.வில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம்!

சென்னை, மார்ச்.10,2011

பெ.ம.க.வில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம்!

அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால், 'பெருந்தலைவர் மக்கள் கட்சி' என்ற கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ஆர்.சரத்குமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ##~~##

பல்வேறு நாடார் சமுதாய சங்கங்கள் ஒன்றாக இணைந்து, நடிகர் சரத்குமார் தலைமையில் 'பெருந்தலைவர் மக்கள் கட்சி' என்ற புதிய கட்சி ஒன்றை திங்கட்கிழமை (மார்ச் 7) தொடங்கின. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நாடார் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், இந்த கட்சியின் தலைவராக ஆர்.சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் உயர்மட்ட குழுவால் விரைவில் அறிவிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் இணைந்தது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.

இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவதாக அதிமுகவுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையில் ச.ம.க. தலைவர் சரத்குமாரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில், தங்கள் கட்சியின் அனுமதியில்லாமல், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததால், தலைவர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் சரத்குமார் நீக்கப்பட்டுள்ளதாக 'பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் உயர்மட்டக்குழு இன்று (மார்ச் 10) இரவு அறிவித்தது.
 
தொடர்புடையச் செய்தி: சரத்குமார் தலைமையில் நாடார்கள் புதிய கட்சி தொடக்கம்

அடுத்த கட்டுரைக்கு