Published:Updated:

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!
பிரீமியம் ஸ்டோரி
திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

Published:Updated:
திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!
பிரீமியம் ஸ்டோரி
திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

செவ்வாய்க் கிரகத்தில் விளையாடச் சொன்னால்கூட செஞ்சுரி அடிப்பார்’ என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பற்றி பிரமிப்பாகச் சொல்வார்கள். நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணி அப்படித்தான் தேர்தல் வெற்றிகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறது. திரிபுராவில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்தி அரியணையை பி.ஜே.பி கைப்பற்றியிருப்பது ‘சாதனை’யாகக் கருதப்படுகிறது. கூடவே, நாகாலாந்து, மேகாலயாவில் அமைந்திருக்கும் கூட்டணி ஆட்சிகள்.

ஏற்கெனவே, வாஜ்பாய் தலைமையில் இரண்டு முறை இந்தியாவை பி.ஜே.பி ஆட்சி செய்தாலும், இந்தியா முழுக்க செல்வாக்குப் பெற்ற கட்சியாக அப்போது அது இல்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சி நீடித்தது. விளைவு... 2004-ம் ஆண்டு தோற்றபோது, அதிலிருந்து மீண்டு வருவதற்கு 10 ஆண்டுகள் ஆனது. இந்தி பேசும் மாநிலங்கள் தவிர வேறெங்கும் பெரிதாக அது அறிமுகம் பெறவில்லை. இம்முறை அப்படி ஆவிகிடக்கூடாது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல திட்டங்களை வகுத்து, இந்தியா முழுக்க வேலைகளைச் செய்கிறது. அதற்குக் கிடைத்த பலன்தான், வடகிழக்கு மாநிலங்களில் பெற்றிருக்கும் வெற்றி.

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

‘அரசியலின் இலக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான்; வழிகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை... தேர்தல் வெற்றிதான் முக்கியம்’ என எடுத்துக்கொண்டால், அதை அடையும் வழியை இன்றைக்குத் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ள கட்சி பி.ஜே.பி மட்டுமே!

ஒரு கார்ப்பரேட் நிறுவனம், தன் வளர்ச்சிக்கு என்னென்ன உத்திகளைக் கையாளுமோ அத்தனையை யும் அரசியலுக்கு அறிமுகம் செய்தது பி.ஜே.பி-தான். அந்தக் கட்சியின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர், ஹிமந்த பிஸ்வா சர்மா. இவர், காங்கிரஸ் கட்சியில் அஸ்ஸாம் மாநில அமைச்சராக இருந்தவர். அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த தருண் கோகோய்க் கும் இவருக்கும் மோதல். அதனால் பி.ஜே.பி-க்கு வந்தார். பழைய காங்கிரஸ் தொடர்புகளைப் பயன்படுத்தி, அஸ்ஸாமில் செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவர்கள் பலரை பி.ஜே.பி பக்கம் கொண்டுவந்தார். அங்கே தேர்தலில் பி.ஜே.பி ஜெயித்தது. அருணாசலப்பிரதேசத்தில் தேர்தலே நடக்காமல் பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல்வரைத் தவிர அத்தனை எம்.எல்.ஏ-க்களும் பி.ஜே.பி-க்கு வந்து விட்டனர். இப்போது பி.ஜே.பி சார்பில் திரிபுராவில் ஜெயித்துள்ள பலரும் முன்னாள் காங்கிரஸ்காரர்கள்தான். அங்கே காங்கிரஸின் வாக்கு வங்கியை பி.ஜே.பி அபகரித்துவிட்டது.

கவனித்துப் பார்த்தால், எல்லா இடங்களிலும் ‘இந்துத்வா’ அரசியலை பி.ஜே.பி பேசுவதில்லை என்பது புரியும். உத்தரப்பிரதேசத்தில் அது எடுபடும் என்பதால், அங்கே பேசினார்கள். குஜராத் தேர்தலில் மோடியும் அமித் ஷாவும் ‘குஜராத்தி’ பெருமிதத்தைப் பேசினார்கள். ‘குஜராத்தின் மகன்களான இந்த இருவரும் டெல்லி வரை சென்று செல்வாக்கு செலுத்துவதைப் பிடிக்காமல் காங்கிரஸ் சதி செய்வதாக’ பேசினார்கள். அஸ்ஸாமில் பெரிய பிரச்னை, வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்து வந்த முஸ்லிம்களுக்கும் உள்ளூர் மக்களுக்குமான மோதல். இந்த விஷயத்தில் உள்ளூர் மக்களுக்குச் சார்பான நிலையை பி.ஜே.பி எடுத்தது. ‘சட்டவிரோதமாகக் குடியேறி யவர்கள் விரட்டப்படுவார்கள்’ என்றே பி.ஜே.பி வாக்குறுதி கொடுத்தது.

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

திரிபுராவிலும் இதேபோன்ற பிரச்னை. ஆனால், கொஞ்சம் வித்தியாசம். வங்க தேசத்திலிருந்து வந்த இந்து பெங்காலிகள் இங்கு பெருமளவில் உள்ளனர். அவர்களுக் கும் பழங்குடிகளுக்கும் நீண்ட காலமாகப் பிரச்னை. இங்கு ‘வங்க தேசத்திலிருந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தது பி.ஜே.பி. இன்னொரு பக்கம், பழங்குடியினர் கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்தது. பழங்குடியினர் தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறார்கள். அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. இப்படி ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ விளையாட்டைச் சாமர்த்தியமாக ஆடியது. திரிபுராவில் தீவிரவா தத்தை ஒழித்து அமைதியைக் கொண்டுவந்தது கம்யூனிஸ்ட்களின் சாதனை. ஆனால், ‘அமைதி மட்டும் போதுமா? வளர்ச்சி எங்கே? வேலை வாய்ப்புகள் எங்கே?’ என்று முழக்கமிட்டது பி.ஜே.பி. இந்தியாவிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் மாநிலத்தில் அது எடுபட்டது.

மற்ற மாநிலங்களாவது பரவாயில்லை... நாகாலாந்தில் 88 சதவிகிதமும், மேகாலயாவில் 83 சதவிகிதமும் கிறிஸ்தவர்கள். அங்கு, சர்ச் சொல்வதே அரசியலிலும் வேதவாக்கு. நாகாலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில், ‘யாரும் பி.ஜே.பி-க்கு வாக்களிக்கக் கூடாது’ என உத்தரவிட்டது. ஆனாலும், இங்கு பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் தேர்தலுக்குப் பிறகான ஆளும் கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெற்றுள்ளது. இங்கெல்லாம் அந்தக் கட்சி இந்துத்வா கோஷத்தையோ, மாட்டிறைச்சிக்கு எதிரான பேச்சையோ எடுக்கவே இல்லை.

திரிபுராவை திருப்பிப் போட்ட தியோதர்!

மற்ற கட்சிகளுக்குத் தேர்தல் பணி என்பது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர் தேர்விலிருந்து தொடங்குகிறது. ஆனால், பி.ஜே.பி அப்படி இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், வாரணாசி தொகுதியில் மோடி வென்றபோது, அங்கு தேர்தல் பணி செய்தவர் சுனில் தியோதர். ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான இவரை, அந்தத் தேர்தல் முடிந்ததுமே திரிபுராவுக்கு அனுப்பி வைத்தார் மோடி. நான்கு ஆண்டுகளாக திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தங்கி தேர்தல் வேலை பார்த்தார் தியோதர். அங்கு உள்ளூர் மக்கள் பேசும் மொழியை, திரிபுரா முதல்வராக 20 ஆண்டுகள் இருந்த மாணிக் சர்க்காரைவிட நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டார். ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பிரச்னை, எதைத் தேர்தல் முழக்கமாக அங்கு பேச வேண்டும், யாருக்குச் செல்வாக்கு உள்ளது, மற்ற கட்சிகளிலி ருந்து யாரை பி.ஜே.பி-க்கு இழுக்கலாம், யாருடன் கூட்டணி அமைக்கலாம், எதிர்க்கட்சிகளை எப்படி பலவீனப்படுத் தலாம் என நான்கு ஆண்டுகள் தேர்தல் வேலை பார்த்தது தியோதர் டீம். அதன் விளைவு... கடந்த தேர்தலில் எங்குமே டெபாசிட்கூட வாங்காத ஒரு கட்சி, 60 தொகுதிகளில் 35 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்திருக்கிறது.

எந்த மண்ணிலும் தங்களால் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகளுக்கு பி.ஜே.பி பாடம் புகட்டியிருக்கிறது.

- தி.முருகன்