Published:Updated:

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

Published:Updated:
“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

‘‘மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்களுடன் ஆளும் தரப்பில் சில மறைமுக ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். விரைவில் முழுமையான தகவல்களோடு பேசுகிறேன்’’ என்று கைகுலுக்கும் போதே கலகலப்பாக ஆரம்பிக்கிறார் காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். எப்போதும் காரசாரத்துக்குப் பஞ்சம் வைக்காமல் சூடுகிளப்பும் அவரிடம் பேசியதிலிருந்து...

‘‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை வரவேற்ற விஜயதரணி எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லையே... ஏன்?’’

‘‘இதுகுறித்து நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரைத்தான் கேட்க வேண்டும். ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய விஜயதரணிமீது உறுதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியவர், பின்னர் ஏன் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார் என்று எனக்குத் தெரியவில்லை.’’

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

‘‘உங்களுடைய பிறந்தநாள் விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டாலும், நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொள்ளவில்லையே... உங்கள் இருவரிடையே பனிப்போர் இன்னும் தொடர்கிறதா?’’

‘‘எனது பிறந்தநாள் விழாக் குழுவினர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ‘கட்டாயம் வருகிறேன்’ என்று அவரும் ஒப்புதல் கொடுத்திருந்தார். பிறந்தநாள் விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட பிறகும் நேரில் சென்று அவருக்கு அழைப்பிதழ் வைத்தனர். அப்போதும் அவர், ‘வருகிறேன்’ என்றே கூறியிருக்கிறார். ஆனாலும், விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கான காரணத்தையும் யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை. அந்தச் சமயத்தில், அவர் துபாய் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.’’

‘‘காங்கிரஸ் கட்சியில் குஷ்பு உள்ளிட்ட உங்களின் ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறதே?’’

‘‘குஷ்புவுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருக்கிறது. மேடைகளில் விஷய ஞானத்துடன் பேசுபவர்; நல்ல சிந்தனையாளர். அதனால்தான், நான் மாநிலத் தலைவராக இருந்தவரையில், அவரைக் கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினேன். ஆனால், இப்போது தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் ஏன் அவரை சரிவரப் பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைவர் என்பவர் பாரபட்சம் பாராமல், அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக இருப்பதுதான் தலைமைக்கு அழகு. குஷ்பு போன்றவர்களை ஒழுங்காகப் பயன்படுத்தினால்தான் கட்சி வளர்ச்சியடையும். ‘ஈகோ’ காரணமாக அவரைப் புறக்கணித்தால், அது கட்சிக்குத்தான் நஷ்டம். சமீபத்தில் நெல்லை மாவட்டத்துக்குச் சென்ற குஷ்புவுக்கு சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். விரும்பத்தகாத அந்த நிகழ்வுகளை சென்னையில் இருப்பவர்கள்தான் தூண்டிவிட்டுள்ளனர். ‘குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துங்கள்’ என இங்கேயிருந்துதான் உத்தரவுகள் போயுள்ளன.’’

‘‘இந்தப் பாரபட்சங்கள் குறித்து டெல்லி மேலிடத்துக்கு புகார் செய்திருக்கிறீர்களா?’’

‘‘இல்லை... யாரைப் பற்றியும் புகார் தெரிவிக்கவில்லை.’’

‘‘ரஜினி, கமல் அரசியல் பிரவேசங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்... இருவரில் யார் அரசியலுக்குப் பொருத்தமானவர் என்று கருதுகிறீர்கள்?’’

‘‘கமல்ஹாசன் அரசியலுக்குள் கால் பதித்துவிட்டார். மதுரையில் நடைபெற்ற அதற்கான விழாவில், ‘தானாகச் சேர்ந்த பெருங்கூட்டம்’ அவருக்காகக் கூடியிருந்தது. அவரும்கூட மேடையிலே தெளிவாகப் பேசினார். இப்போது அவர் பேசுவதும் மக்களுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால், திருஷ்டிப் பரிகாரம்போல், அதே மேடையில் கெஜ்ரிவாலைப் பேசவைத்துவிட்டார். காங்கிரஸையும் தி.மு.க-வையும் கெஜ்ரிவால் தாக்கிப் பேசியது சரியல்ல. எதிர்காலத்தில், கமல்ஹாசன் இந்தப் போக்கைத் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில், அவரது அரசியல் ஆரம்பம் நன்றாகவே இருக்கிறது. அவரது பாதை என்னவென்றும் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். ஆனால், ரஜினியிடம் அந்தத் தெளிவு இல்லை. ‘ஆன்மிக அரசியல்’ என்று குழப்புகிறார். ‘காவி அரசியல்’ என்று அவர் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போகலாம். பி.ஜே.பி-யினர்தான் ரஜினியைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் என நான் உறுதியாக நினைக்கிறேன்.’’

“கமல் தெளிவானவர்... ரஜினி குழப்பவாதி!” - இளங்கோவன் அதிரடி

‘‘ஜெ. மரணம் தொடங்கி ஜெ. சிலை வரை  தமிழக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?’’

‘‘கோமாளித்தனமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கம்ப ராமாயணத்தை எழுதியவர் ‘சேக்கிழார்’ என்று சொல்லக் கூடியவர்தான் முதல்வராக இருக்கிறார். கடந்த ஆண்டு வைகை அணையை தெர்மாகோலைப் போட்டு மூடியவர்கள், இந்த ஆண்டு தார்ப்பாய் போட்டு மூடுவார்களோ என்னவோ.

அ.தி.மு.க அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள ஜெயலலிதா சிலையின் முகத்தைப் பார்க்கும்போது, எனக்குப் பழைய நடிகை அங்கமுத்துவின் ஞாபகம்தான் வருகிறது. இத்தனைக் குறைபாடுகள் இருந்தபோதிலும், ‘எவ்வளவு முடியுமோ... அவ்வளவு சுருட்டிக்கொண்டு போவோம்’ என்ற ஒரு விஷயத்தில் மட்டும் அத்தனை அமைச்சர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஓய்வுபெறும் அரசு அதிகாரிகள், தொந்தரவு இல்லாமல் ஓய்வூதியம் பெறுவதற்குக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்.’’

- த.கதிரவன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்