Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

யோகா வெங்கட், சத்துவாச்சேரி.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு டஃப் ஃபைட் கொடுக்கப்போவது யார்?


பி.ஜே.பி-யின் எண்ணம் நிறைவேறினால், ரஜினி!

கழுகார் பதில்கள்!

மனோகர், கோவை-14.

ஜெயலலிதாவின் பக்கபலத்தால் பணம் சேர்த்து வைத்திருக்கும் சசிகலா குடும்பம், தினகரன் மூலமாகப் பணத்தால் தமிழக அரசியலைக் கைப்பற்ற முயற்சி செய்வது பலிக்குமா?


எடப்பாடி, பன்னீர் தரப்பும் இப்படி வைத்துள்ளது. நடப்பது பணப் போட்டி தான்! ஆர்.கே.நகரில் பலித்ததைத்தான் அனைவரும் பார்த்தோம். மொத்த தமிழகத்திலும் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முத்தூஸ், தொண்டி.


‘நான் கோபப்பட்டால் நிறைய உண்மைகள் வெளியே வரும்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறாரே?


அவர் கோபப்படவும் மாட்டார். அதனால், உண்மைகளும் வெளியே வராது. தினகரனோ, சசிகலாவோ கோபப்பட்டு, அவர்கள் எல்லா உண்மைகளையும் சொல்ல ஆரம்பித்தால் என்னவாகும் என்பது பன்னீருக்கும் தெரியும்!

கழுகார் பதில்கள்!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி.

பிரதமர் மோடியின் தலையீடு அ.தி.மு.க-வில் இருந்ததை ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்கிறாரே?


‘‘மோடி சொன்னதால்தான் அமைச்சரவையில் இணைந்தேன்’’ எனப் பன்னீர்செல்வம் சொன்னதை மறுக்காததன்மூலம், தலையீடு இருந்ததை மோடியும் ஒப்புக்கொண்டதாகத்தானே அர்த்தம்?!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சந்தோஷமாக இருக்கிறார்களா?

நிறைய அதிகாரிகள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கும் டெல்லிக்கும் மாறுதல் வாங்கிக்கொண்டு செல்வது அதிகரித்துள்ளது. அதனால், ‘இருக்கிறார்களா’ என்ற கேள்விக்கே சந்தேகமாகத்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அப்புறம்தானே ‘சந்தோஷமாக இருக்கிறார்களா’ என்பதைச் சொல்ல முடியும்!

எஸ்.ராமதாஸ், சேலம்.

ஆண்டவன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தினால் அது தவறா?


அரசியலில் சிக்கி ஆண்டவனுமா அசிங்கப்பட வேண்டும்? அரசியலுக்குள் ஆண்டவனை அழைத்து வராமல் இருப்பதும்கூட ஆன்மிகத் தொண்டுதான்!

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘தமிழகத்தைத் தமிழர்கள் ஆள வேண்டும்’ என்று ராதாரவி கருத்துத் தெரிவித்துள்ளாரே?


நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தம்பிமார்கள், ராதாரவியையே தமிழர் என ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்?!

கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

வாழ்க்கையின் வெற்றி என்பது யாது? தோல்வி என்பதென்ன?


தோல்வியை வெல்வதுதான் வெற்றி. தோல்விக்கான காரணத்தை உணராமல் இருப்பதுதான் தோல்வி.

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

‘காலத்தின் கட்டாயம்’ என்றால் என்ன?


அரசியல்வாதிகள் சொல்கிற அனைத்தையும் தலையெழுத்தே என்று மக்கள் கேட்டுத் தொலைக்க வேண்டியிருப்பதுதான் காலத்தின் கட்டாயம்.

இந்த வார்த்தைகளை ஆர்.எம்.வீரப்பன்தான் அரசியலில் பிரபலப்படுத்தினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகியை அரசியலுக்கு அழைத்து வந்த அவர், ‘‘இது காலத்தின் கட்டாயம்’’ என்றார். அந்த வார்த்தைகளை இப்போது எல்லோரும் பயன்படுத்தி வருகிறார்கள். ‘‘புதிதாகக் கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் கருணாநிதியைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவது காலத்தின் கட்டாயம்’’ என்று டி.ராஜேந்தர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, காலத்துக்குக் கட்டாயங்கள் ஏற்படுவதுகூட, காலத்தின் கட்டாயம்தான் போலும்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.


பொருளாதாரம் என்றால் என்னங்க?


‘‘அக்கா, உங்க தோட்டத்துல முருங்கைக்கீரை பறிச்சுக்கட்டுமா?’’ என்று பக்கத்து வீட்டில் கேட்டுப் பறித்துச் செல்கிறாள் ஒரு பெண். அடுத்த சில நாள்களில், ‘‘ஊர்ல இருந்து தம்பியும் தம்பி பொண்டாட்டியும் வந்திருக்காங்க. உங்க தோட்டத்துல வாழை இலை ரெண்டு அறுத்துக்கிறேன்’’ என்று கேட்கும் அந்த அக்காவுக்கு, அந்தப் பெண் தலையாட்டுவதில் ஆரம்பிக்கிறது பொருளாதாரம். இதைப் பண்டமாற்றுப் பொருளாதாரம் என்று சொல்லலாம். இதன் படிப்படியான வளர்ச்சிதான், இன்று உலகப் பொருளாதாரம் என்கிற பெயரில் பெரும்பெரும் விற்பன்னர்கள் எல்லாம் அலசி ஆராயும் நிலைக்கு வந்திருக்கிறது.

ஆனால், எந்தக் காலத்திலும் போற்றுதலுக்குரிய ஒன்று, கிராமியப் பொருளா தாரம்தான். இதைப்பற்றி ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா இப்படிச் சொன்னார். ‘‘பெருந் தொழில்கள், பெரும்பொருளா தார அமைப்புகள் அனைத்தும் அரசின் ஆதரவுடன் வேகமெடுக்கின்றன. சிறு தொழில்களையும், பரவலான பொருளாதார அமைப்பு களையும் அழித்து இவை உருவாக்கப்படுகின்றன. கிராமங் கள், கைத்தொழில்கள், வேளாண்மை அனைத்தும் வஞ்சகமாக ஆங்கிலேய அரசால் ஒழிக்கப் படுகின்றன. விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களைப் பெருந்தொழில் களுக்கு இலவசம்/ மானியம் என்கிற பெயரில் கொடுக்கும் வகையிலேயே அரசின் கொள்கைகள் தீட்டப் படுகின்றன. இதனால், பெருந்தொழில்களின் உற்பத்திச்செலவு குறைகிறது. இப்படித் திட்டமிட்டே விலை குறைக்கப்பட்ட இந்தப் பொருள்களுடன், ஏழை எளிய மக்கள் அன்றாட வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே உற்பத்தி செய்யும் பொருள்களால் போட்டியிட முடிவதில்லை. இது, ‘கொள்ளைப் பொருளாதாரம்’ இதை வைத்து வளர்ச்சியை ஒருபோதும் உருவாக்க முடியாது. பரவல்முறை உள்ளூர்ப் பொருளாதாரம் தான் வளம் சேர்ப்பதாகவும், வளர்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து தருவதாகவும், இயற்கையைப் பேணுவதாகவும் இருக்கும். இதுவே பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும்.’’

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கழுகார் பதில்கள்!

‘சமஸ்கிருதத்தைவிடத் தமிழ் மூத்த மொழி’ என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால், தமிழை நீதிமன்ற மொழி ஆக்குவதற்கு அவர் தலைமையிலான மத்திய அரசு மறுத்துவருகிறது. இந்தியா முழுக்கப் பேசப்படும் 22 மொழிகளை மத்தியில் ஆட்சிமொழி ஆக்குவதற்கு மறுக்கிறார் பிரதமர் மோடி. ஏன் இந்த முரண்பாடு?

இது, காங்கிரஸ் காலம்தொட்டு நடந்துவரும் துரோகம். அப்போதிருந்தே உறுதிமொழிகள் கொடுப்பதை மட்டுமே வடஇந்தியத் தலைவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் ‘பேச்சு ஒன்று, செயல் வேறொன்று’ என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் வழக்கமானதுதானே. இதில் நரேந்திர மோடி மட்டுமே விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? ‘சமஸ்கிருதத்தைவிடத் தமிழ் மூத்த மொழி’ என்று பேசுவதைவிட, தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்குவதற்கு மோடி ஒப்புதல் தந்தால், அதுதான் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். ‘வணக்கம்’, ‘நன்றி’ எனத் தமிழ்நாட்டுக்கு வரும்போது பேசுவதைவிட, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முயற்சி செய்தால், தமிழ்நாட்டுக்கு வளம் சேர்ப்பதாக அமையும். பாரதி பாடல்களை மேடைகளில் ஒப்பிப்பதைவிடக் கீழடி ஆய்வுகளுக்குத் தடைபோடாமல், அந்த ஆய்வு தொய்வின்றித் தொடர அனுமதித்தால் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்ததாக அமையும். ‘சர்க்கரை என்று எழுதுவதால் வாய் இனிக்காது’ என்பதை உணர வேண்டும்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!