Published:Updated:

“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”

“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”

தீபா திகைப்பு

“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”

தீபா திகைப்பு

Published:Updated:
“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”

‘‘பேரவை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் ஒவ்வொரு நாளும் நிறைய பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுள்ளேன். இதுவரை அமைப்பை ஒழுங்குபடுத்தும் வேலைகளில் கவனம் செலுத்திவந்தேன். இதுவரை அ.தி.மு.க-வின் ஓர் அங்கமாக ஜெ.தீபா அணி செயல்பட்டது. இப்போது, அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர வேண்டும். எனவே, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைக் கட்சியாக மாற்ற முடிவெடுத்துள்ளோம். விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்’’ என்கிறார் ஜெ.தீபா. அவரிடம் பேசியதிலிருந்து...

‘‘உங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் உள்ளனவே?’’

‘‘இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது. போலி வழக்குகள், பொய் வழக்குகள் என்று திட்டமிட்டுப் பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். என்னை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. தொடர்ச்சியாக எனக்கு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. போலீஸில் பலமுறை புகார் கொடுத்துள்ளேன். இதுநாள்வரை எனது வழக்குகள், நான் கொடுத்த புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. என் உயிருக்கே பாதுகாப்பு இல்லை.’’

“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”

‘‘ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தால், கமல், ரஜினி உள்பட சினிமா நடிகர்கள் அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள் என்கிற பேச்சு உள்ளதே?’’

‘‘இதை அப்படிப் பார்க்க முடியாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அம்மா உயிருடன் இருந்தபோதுதான், நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார் அரசியல் கட்சிகளை ஆரம்பித்தனர். அவர் அதையெல்லாம் தடுக்க வில்லை. கமலும் ரஜினியும் அப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்கள். இப்போது கமல் அரசியல் கட்சி துவங்கியிருக்கிறார். அவரால் கண்டிப்பாக அரசியலில் மாற்றம் வரும். ரஜினி அரசியல் குறித்து நீண்டகாலமாக முடிவெடுக்காமல் இருப்பதுபோலவே இப்போதும் இருக்கிறார் என்றே தோன்றுகிறது.’’

‘‘தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளதை விமர்சிக்கிறீர்களே?’’

‘‘அம்மாவின் கனவுத்திட்டமான இதை, பிரதமர் மோடியை வைத்துத் தொடங்கியிருப்பது கண்டனத்துக்குரியது. முதல்வரோ, துணை முதல்வரோ இதைத் தொடங்கி வைத்திருக்கலாம். ஆனால், தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மாநில அரசின் திட்டத்தை இன்னொரு கட்சியின் தலைவரான பிரதமர் தொடங்கி வைத்திருப்பது தவறு. இவர்கள் தமிழக அரசை ஆட்டிப்படைக்கிறார்கள். இதற்குமேலேயும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மத்திய பி.ஜே.பி அரசு மறைமுகமாக இல்லை, நேரடியாகவே தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதற்குப் பதிலாக முதல்வரையும் துணை முதல்வரையும் பதவி விலக வைத்துவிட்டு, பி.ஜே.பி நேரடியாக ஆட்சியை நடத்த வேண்டியதுதானே?’’

‘‘உங்களின் அடுத்தகட்டச் செயல்பாடு என்ன?’’

‘‘யாரையும் எதிர்ப்பது எனது நோக்கம் இல்லை. அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். அதனால் அரசியலுக்கு வந்தேன். கடந்த ஓராண்டில் மத்திய அரசால் தமிழகம் சந்தித்த கொடுமைகள் ஏராளம். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரியலூர் மாணவி அனிதா இறப்பு, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் என்று மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. இவ்வளவு நாள்களாக இவற்றைப் பொறுத்துக்கொண்டிருந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்பதால், இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படப்போகிறோம். நிச்சயம் இனி என் அரசியல் வேகம் அதிகமாகும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பேன்.’’

‘‘இந்த ஆட்சியை அகற்றப் போராட்டம் நடத்துவீர்களா?’’

‘‘இந்த ஆட்சி அகற்றப்பட வாய்ப்பில்லை. மத்திய பி.ஜே.பி அரசின் ஆசி இருக்கும்வரை இந்த ஆட்சி நீடிக்கும்.’’

‘‘ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலாவுக்குச் சாதகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறீர்களே?’’

‘‘அம்மாவின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்பதால்தான், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அவர் நினைத்தால் சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை கண்டுபிடித்ததை மக்க ளுக்குத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டது. சசிகலா வுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்த விசாரணை ஆணையம், அவருக்குச் சாதகமாகச் செயல்படுகிறதோ என நினைக்க வைக்கிறது. இதனால்தான் ‘அம்மாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்கிறேன்.’’

‘‘மக்கள் பிரச்னைகளில் ஜெயலலிதாவிடம் இருந்த ஆளுமையை உங்களிடம் எதிர்பார்க்கலாமா?’’

‘‘மீண்டும் சொல்கிறேன். அவர்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம். அவர் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.’’

“யாரோ ஒருவருக்கு சிலை வைத்துவிட்டு ‘அத்தை’ என்கிறார்கள்!”

‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள சிலை குறித்துச் சர்ச்சைகள் கிளம்பியுள்ளனவே?’’

‘‘அம்மாவின் முகம் எவ்வளவு அழகானது. யாரோ ஒருவரின் சிலையை வைத்துவிட்டு, ‘இது அத்தையின் சிலை’ என்கிறார்கள். யாரோ ஒருவரின் சிலையை எப்படி அம்மாவின் உருவம் எனத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்?’’

- சி.ய.ஆனந்தகுமார்
படம்:  என்.ஜி.மணிகண்டன்