Published:Updated:

சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு
சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு
சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை: "நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு விமான  நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை உள்நாட்டு விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முனையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரே சூட்ட வேண்டும் என மத்திய அரசிடம் கோரி சட்டப்பேரவையில் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்துள்ளார்.

உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் சூட்டப்பட்டது. தற்போது சென்னை உள்நாட்டு விமான நிலையம் ரூ.2300 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு அதிநவீன முனையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முனையம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த உடன் ஏற்கனவே உள்ள உள்நாட்டு விமான நிலையம் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் நிலையே  உள்ளது. எனவே விமான நிலையத்தின் நவீன முனையத்திற்கும் பெருந்தலைவர் காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும்.

சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு

டெல்லியில் ஆசியாவின் 3வது மிகப்பெரிய விமான நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நிலையம் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் அவர் பெயரே நீடிக்கிறது.

அதேபோல், மும்பையில் சத்ரபதி சிவாஜி பெயரில் உள்ள விமான நிலையம் விரிவாக்கப்பட்ட பின்னரும் பழைய பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. இதேபோல், விரிவாக்கப்பட்ட சென்னை விமான நிலைய முனையத்திற்கும் காமராஜர் பெயரே நீடிக்க உத்தரவிட வேண்டும்.

திருச்சி விமான நிலையம் ரூ.100 கோடி செலவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்ட உத்தரவிட வேண்டும்" என்று கடிதத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.