Published:Updated:

சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கப்படும்: பிரதமர் உறுதி

புதுடெல்லி: சூரிய ஒளி , காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மூலம்  தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற மாசற்ற எரிசக்தி உற்பத்தி குறித்த சர்வதேச கருத்தரங்கை துவங்கி வைத்து பேசுகையில் இதனை தெரிவித்த அவர்," இந்தியாவில், தற்போது 25,000 மெகாவாட்டாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி இருமடங்குக்கு மேலாக அதிகரிக்கும். வருகிற 2017ம் ஆண்டுக்குள் 55,000 மெகா வாட்டாக உயரும்.

சோலார் மின் உற்பத்தியின் அளவும் 2017க்குள் 10,000 மெகா வாட்டாக அதிகரிக்கும். மேலும், சர்வேதச அளவிலான சூரியசக்தி குறித்த ஆராய்ச்சி நிறுவனம் 2015ம் ஆண்டுக்குள் நிறுவப்படும். நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு இடையூறுகள் உள்ளபோதிலும், அவைகளை நீக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

##~~##
சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் எரிசக்திகளை பயன்படுத்துவதில் அரசு கவனமுடன் செயல்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான ஐ.நா கொள்கையை இந்தியா தீவிரமாக கடைப்பிடிக்கிறது" என்றார்.