Published:Updated:

‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்

‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்

‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்

‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’, ‘அ.இ.அ.தி.மு.க (தீபா அணி)’ ஆகிய கட்சிகளின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரான தீபாவின் அரசியல் பணிகளும், சமூக வலைதளங்களும் பிரிக்க முடியாதவை. ஆனால், மார்ச் 7-ம் தேதி ‘சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறப்போகிறேன்’ என்று திடீர் அறிவிப்பு செய்து, தன் தொண்டர் களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் தீபா. தன் அறிவிப்புக்கான காரணத்தை அவர் வெளிப்படையாகச் சொல்லாததால், தீபாவின் தொண்டர்கள் ஒருவிதமான குழப்பத்திலும், மன உளைச்சலிலும் தவித்துவருகின்றனர்.

தீபா அறிவிப்பின் பின்னணியில் உள்ள ரகசியத்தைத் தேடி நாம் ‘புலனாய்வில்’ இறங்கி னோம். இதற்குக் காரணம் ஒரு வாட்ஸ்அப் குரூப் என்பதைக் கண்டுபிடித்தோம். ‘MGRJJDMK உண்மைத் தொண்டர்கள்’ என்ற அந்த குரூப், தீபாவின் கணவரும், ‘எம்.ஜி.ஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகம்’ கட்சியின் பொதுச் செயலாளருமான மாதவனின் நலம்விரும்பிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்

“கணவர் தலைமையில் ஒரு கட்சி, மனைவி தலைமையில் இன்னொரு கட்சி என இரண்டு ‘அரசியல் கட்சி’களின் தலைவர்களும் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக வசிக்கிறார்கள். தொண்டர்களாகிய நாங்கள் அவர்களைப் பிரித்துப்பார்க்க விரும்பவில்லை” என்று நம்மிடம் அக்கறையுடன் பேசினார், அந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள தீபா-மாதவன் தம்பதியின் நலம் விரும்பி ஒருவர். தீபா-மாதவன் தம்பதியை ஒற்றுமைப்படுத்த வேண்டும், அவர்களின் கட்சிகளைப் பலப்படுத்த வேண்டும் என்ற ‘நல்ல நோக்கங்களோடு’ ஆரம்பிக்கப்பட்ட அந்த குரூப்பில், தீபாவையும் மாதவனையும் இணைத்தனர். ஆனால், பல கசப்பான அனுபவங்களால் தீபா மற்றும் மாதவனிடமிருந்து விலகிச் சென்று, அவர்கள் இருவர் மீதும் ‘செம காண்டு’டன் இருக்கும் பலரையும் குரூப்பில் ‘கோத்து’விட்ட பிறகு, ஒரே ரணகளம்தான்.

தீபாமீதும், மாதவன்மீதும் பல்வேறு புகார்களை அடுக்கி அந்த நபர்கள் பதிவிடும் வார்த்தைகளை வாசித்தால் வாய் அழுகிவிடும்... அவர்களின் குரல் பதிவுகளைக் கேட்டால் காது அழுகிவிடும் என்கிற அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகள். ‘திமிர் பிடித்த தீபாவுக்கு...’ என ஆரம்பித்து ஒரே ஆபாச அர்ச்சனைகளுடன் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவர் போட்ட பதிவால் குரூப் அதிர்ந்தது. “அம்மா என்று சொல்லிக்கொண்டு தீபாவிடம் போனோம். பிறகுதான் அவருடைய புத்தி தெரிந்தது... மாற்று வேண்டும் என மாதவனைத் தலைவராக ஏற்றுக்கொண்டோம்... அவர் நூறு தீபாக்களுக்குச் சமமான ஆள் என்பது பின்புதான் தெரிந்தது” என ‘முன்னாள் நலம் விரும்பிகள்’ வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்

‘தேளின் குணம் கொட்டுவது, என் குணம் அதை நசுக்குவது’ என ஒரு தொண்டர் முழக்கமிட, தீபா வீட்டு அட்ரஸைக் குறிப் பிட்டு இன்னொருவர், ‘இங்கே நிறைய தேள்கள் மேய்கிறது. நசுக்கலாம் வாங்க’ என அழைப்பு விடுத்தார். இடையில் ஒருவர் புகுந்து, ‘புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர் கள் மட்டும் குரூப்பில் இருக்க வும்’ எனப் பதிவிட, உடனே மாதவன் வெளியேறினார். ‘ஓடி விட்டார். அவர் உண்மைத் தொண்டர் இல்லை போலும்’ என இன்னொருவர் கிண்டல் செய்து திரும்பவும் மாதவனை உள்ளே இழுத்தார். இதேபோல, ஒரு கட்டத்தில் கடுப்பான தீபா குரூப்பைவிட்டு வெளியேறினார்.  ‘‘இந்தா... எங்கப் போற...?’’ என அவரை மீண்டும் இழுத்துவந்து குரூப்பில் சேர்த்து, வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

மார்ச் 4-ம் தேதி வாய்ஸ் மெசேஜ் போட்ட ஒருவர், “4.3.2017 தேதியை என்னால் மறக்கவே முடியாது. இது, தீபாவை நம்பி அம்பது லட்சத்தை இழந்த நாள். என் உயிர் உள்ளவரை இந்த நாளை மறக்கவே முடியாது. இதே நாளில், ஆசை ஆசையாய்... அளவு கடந்த அன்புடன்... ‘அண்ணன்... அண்ணன்’ என்று பெரிய மரியாதையுடன் போனேன். நல்லவங்க மாதிரி பேசிப் பேசி கழுத்தறுத்திட்டீங்க. இத்தோட நிறுத்திக்கோங்க...” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே கெட்டவார்த்தைகளைப் போட்டு தன் ஆதங்கத்தைக் கொட்டினார் ஒருவர்.

“கட்சியைவிட்டுப் போனவங்களைக் கூட்டிவந்து... பணம் தர்றோம்னு ஆசை காட்டினீங்க... எல்லா அயோக்கியத்தனத்தையும் செஞ்சது நீங்க... போலி ஐ.டி ஆபீஸரை அனுப்பினது யாரு... பாண்டிச்சேரிக்கு அடிக்கடி போனது யாரு... என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு...” என ஒருவர் கொந்தளிக்க, திரும்பவும் குரூப்பைவிட்டு வெளியேறினார் மாதவன். உடனே, ‘‘சொன்னா கேக்க மாட்டீங்களா பாஸு’’ என மாதவனை வம்படியாக குரூப்புக்குள் மீண்டும் கொண்டுவந்தனர்.

‘ஒரு மாதவன் நூறு தீபாக்களுக்குச் சமம்!’ - வாட்ஸ்அப் ரணகளம்

‘‘நீங்க என்னென்ன செஞ்சீங்க... என்னென்ன பேசினீங்க... எல்லாத்தையும் சி.டி போட்டு வெச்சிருக்கேன்’’ என தீபாவையும் மாதவனையும் எச்சரித்து பதிவிட்டுள்ளார் ஒருவர்,

தீபாவும் மாதவனும் வழக்கம்போல குரூப்பில் இருந்து வெளியேறியிருப்பது லேட்டஸ்ட் தகவல். எந்த நேரத்திலும் அவர்கள் மீண்டும் குரூப்புக்குள் கொண்டுவரப்படலாம்.

கட்சின்னா... இப்படி கலகலன்னு இருக்கணும்!

- ஜெ.அன்பரசன்