Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

ம்மா, அட்மின் வரிசையில் லேட்டஸ்ட்டாக ட்ரெண்டாகியுள்ளது ‘அட்மின்’. உபயம் - ஹெச்.ராஜாதான். வரவர கம்பேரிஸன் கோவாலு கன்டென்ட்டைவிட ஹெச்.ராஜாவின் கன்டென்ட் சூப்பராக இருப்பதாக சொந்த மனசாட்சியே சத்தியம் செய்கிறது. எவ்வளவு யோசித்து ஒரு பக்கத்துக்கு எழுதினாலும், அதை அசால்ட்டாக ஒரு ஸ்டேட்டஸில் ஓவர்டேக் செய்கிறார் ஹெச்.ராஜா. சரி, அவரின் அட்மின் எப்படி அவரைச் சமாளிக்கிறார்? போலவே, வேறு சில அட்மின்கள் பற்றியும்...

கம்பேரிஸன் கோவாலு!

ஹெச்.ராஜா அட்மின்

கோ
பம், பயம், சிரிப்பு, அழுகை என நவரசங்களில் நான்கைந்து ரசங்களைத் துறந்தவரால் மட்டுமே இந்தப் பொறுப்பை வகிக்கமுடியும். போஸ்ட் போட்ட கையோடு கமென்ட்களைத் திரும்பிக்கூட பார்க்காமல் லாக் அவுட் செய்துவிடுவது அவரின் ஹெல்த்துக்கு மிகவும் நல்லது.

எப்படியும் போடும் பத்து ஸ்டேட்டஸ்களில் ஒன்பதரை ஸ்டேட்டஸ்கள் டெலிட் ஆகிவிடும் என்பதால், எந்நேரமும் அலெர்ட்டாக மன்னிப்பு அறிக்கையுடன் திரியவேண்டும்.

கமல் அட்மின்

மு
ன்னவருக்காவது கமென்ட்தான் எகிடுதகிடாக வரும். நம்மவருக்கு ஸ்டேட்டஸே அப்படித்தான். ‘டாவின்சி கோடை’ உடைக்க முடிந்த ஆட்களால்கூட, ஆண்டவர் கோடை அசைக்க முடியாது என்பதால் அட்மின் ஏற்கெனவே கீழ்ப்பாக்கம் போக பஸ்ஸைப் பார்த்தபடிதான் இருப்பார். இதில் எல்லாக் கருத்துகளும் நடுசென்டராக வேறு இருப்பதால், இரண்டு சைடுகளிலிருந்தும் உலக்கையால் குத்துவார்கள். உலக நாயகனுக்காக உலக்கை அடி எல்லாம் வாங்கவேண்டும்.

ரஜினி அட்மின்

ந்தப் பிரச்னை என்றாலும் இரண்டு நாள்கள் கழித்துக் கருத்துச் சொன்னால் போதுமென்பதால், இவருக்கு வேலைப்பளு அதிகமிருக்காது! ஸ்டேட்டஸில் நடுநடுவே இங்கிலீஷ் வார்த்தைகள் தூவத் தெரிந்திருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் - ரஜினி பட கொலாஜ்களை அவ்வப்போது, பதிவிட வேண்டும். தப்பித்தவறிக்கூட பி.ஜே.பி-யைப் பரிகாசம் செய்துவிடக்கூடாது. அதைவிட முக்கியம், ‘வாடகை’ என்ற வார்த்தை வந்தாலே கமென்ட் டெலிட்தான்.

ஸ்டாலின் அட்மின்

பொ
ங்கல் பண்டிகை - அறுவடைத்திருநாள், விநாயகர் சதுர்த்தி - விடுமுறைத் திருநாள்... இப்படித் தனி அகராதியை மெயின்டெய்ன் பண்ண வேண்டும். கிட்டத்தட்ட பூ-புய்ப்பம் கதைதான். கொஞ்சம்கூட இந்த வழக்கம் மாறிவிடக்கூடாது. அறிக்கைகள் வரிசைகட்டி வந்துகொண்டே இருக்குமென்பதால், ஓவர்டைம் பார்த்தே ஆகவேண்டும். இதில் ‘முன்பொரு காலத்தில்’ அ.தி.மு.க-வாக இருந்த கட்சித் தொண்டர்கள் வம்பிழுப்பதை வேறு சமாளிக்கவேண்டும்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி