Published:Updated:

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)
பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

நெல்லை: அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

நெல்லையில் கடந்த 6.8.2012 அன்று நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக கடந்த 10.1.2013 அன்று நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் முத்துகருப்பன் வழக்கு தொடர்ந்தார்.

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

கடந்த, பிப்ரவரி 28, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை.

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

இதையடுத்து, விஜயகாந்த்துக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி கமலாவதி உத்தரவி்ட்டதோடு, ஜூன் 10ஆம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தார்.

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

இதனிடையே, நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, விஜயகாந்த் இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து பிடிவாண்டை ரத்து செய்த நீதிபதி கமலாவதி, வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 

பிடிவாரண்ட் எதிரொலி: நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர் (படங்கள்)

நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானதையொட்டி ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.


ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்