Published:Updated:

அழகிரி மகனுக்கு எதிராக வாக்குமூலம் கொடு: மிரட்டும் போலீஸுக்கு எதிராக வழக்கு

அழகிரி மகனுக்கு எதிராக வாக்குமூலம் கொடு: மிரட்டும் போலீஸுக்கு எதிராக வழக்கு
அழகிரி மகனுக்கு எதிராக வாக்குமூலம் கொடு: மிரட்டும் போலீஸுக்கு எதிராக வழக்கு

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி மிரட்டல் விடுக்கும் போலீஸுக்கு எதிராக தி.மு.க. பிரமுகரின் மகன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

அழகிரி மகனுக்கு எதிராக வாக்குமூலம் கொடு: மிரட்டும் போலீஸுக்கு எதிராக வழக்கு

மதுரையைச் சேர்ந்த சூடம்மணி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மீது நிலஅபகரிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் நிலத்தை அபகரித்த வழக்கில் இவரும், பொட்டு சுரேஷும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தற்போது சூடம்மணி ஜாமீனில் உள்ளார்.

இதற்கிடையே, கிரானைட் முறைகேடு தொடர்பாக இவரது மகன் நாகராஜன் மீது கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்காக நாகராஜனை போலீஸார் அழைத்திருந்தனர்.

இந்த நிலையில், போலீஸுக்கு  எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாகராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "அரசு நிலத்தை ஆக்கிரமித்து குவாரி நடத்தியதாகவும், கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும் கீழவளவு போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நான் ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுவிட்டேன்.

ஜாமீன் கொடுக்கும் போதே, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. என் மீதான கிரானைட் முறைகேடு வழக்கு பற்றி மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு முறை சம்மன் அனுப்பும் போதும், நான் விசாரணைக்காக ஆஜராகி வருகிறேன். ஆனால், விசாரணையின் போது முன்னாள் மத்திய அமைச்சர் (மு.க.அழகிரி)யின் மகனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு என்னை மிரட்டுகிறார்.

##~~##
உண்மையில்லாத, இட்டுக்கட்டிய விஷயங்களை எழுதி அதில் கையெழுத்துப் போடும்படி என்னை நிர்பந்திக்கிறார். சட்டப்படி யாரையும், யாருக்கும் எதிராக சாட்சி சொல்லும்படி நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிந்தும், மீண்டும் என்னை விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி உள்ளார். விசாரணைக்குச் சென்றால், என்னை மீண்டும் போலீஸார் மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோரின் ஜாமீன் மனுவும் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கே.கே.மகேஷ்