அரசியல்
Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

‘மாற்றுக் கட்சியில் இருக்கும் மாண்பாளர் களையும் அரவணைப்போம்’ என்று கமல் சொன்னாலும் சொன்னார்... தமிழிசை, ஹெச்.ராஜா என அனைவருக்கும் உறுப்பினர் கார்டுகளைக் கொடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம். என்ன ஒரே பிரச்னை... இது அவர்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இதேரீதியில், இன்னும் சில முக்கிய ஆட்களைக் கட்சியில் சேர்த்தால் மய்யம் பலம்பெறும். இவர்கள் அனைவரும் ஸ்தாபனத் தலைவர் கமலை ஒரு சாயலில் பிரதிபலிப்பவர்கள் என்பது முக்கிய அம்சம்.

கம்பேரிஸன் கோவாலு!

கோவிந்தராஜன் ரங்கசாமி: இவரும் கலாம் போல ஒரு விஞ்ஞானிதான். துறைதான் வேறு. பயோ - சயின்ட்டிஸ்ட். அமெரிக்கா - இந்தியா இடையே நிகழவிருந்த மிக ஆபத்தான ரசாயனப் போரை ஒரே ஆளாகத் தடுத்து நிறுத்தியவர். இதற்காக, புஷ் கையால் விருதும் வாங்கியிருக்கிறார். போக, இவருக்கு பஞ்சாப், ஜப்பான் போன்ற இடங்களிலெல்லாம் நண்பர்கள் உண்டு. இப்படி தசாவதாரங்களும் எடுப்பவர் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தால், உலகளாவிய வெளிச்சம் கிடைக்கும் என்பது உறுதி.

நல்லசிவம்:
இவர் ஒரு போராளி. சிவப்பும் கறுப்பும்தான் இவரது அடையாளம். ஆனால், தி.மு.க-வைச் சேர்ந்தவர் அல்ல. மய்யமான கம்யூனிஸ்ட். தொழிலாளர் போராட்டங்க ளுக்காகப் பல வீதி நாடகங்களை இயற்றியிருக்கிறார். கார்ப்பரேட்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர். ‘அன்பே சிவம்’ என்பது இவரின் கொள்கை. இவரை இணைத்துக்கொண்டால், மனிதநேய மக்கள் நீதி மய்யமாக அமைப்பு மாறிவிடும்.

வேலுபாய்: மும்பையில் கொடிநாட்டிய வீரத்தமிழர். காக்கிச்சட்டைக் கொடூரங்களுக்கு எதிராக, பல ஆண்டு களுக்கு முன்பே குரல் கொடுத்தவர். இவரும் நல்லவரா, கெட்டவரா என்பதே தெரியாத மய்யமான குணநலன்களைக் கொண்ட நாயகன். இவரை மய்யத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக மராட்டியத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறலாம்.

செல்வம்: கமலுக்கு ‘நம்மவர்’ எனப் பெயர்வரக் காரணமே இந்தச் செல்வம்தான். கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிகிறார். ‘ஒழுக்கமும் கல்வியும் அரசியல் அறிவுமே மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்’ என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். இவரை மய்யத்தில் இணைத்துக்கொள்வதன்மூலம் கல்லூரி மாணவர்களின் ஆதரவைப் பெற முடியும்.

சேனாபதி:
வயதில் மிக மூத்த இந்தியன். மய்யத்தில் இணைந்தால் சீனியர் போராளியாக இவரே இருப்பார். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றவர். வர்மக் கலையில் பெரிய வஸ்தாது. வாரிசு அரசியலில் ஈடுபாடு இல்லாதவர். தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர் கமல் என்பதால், சேனாபதியின் வழிகாட்டுதல் உலக நாயகனுக்கு உதவக்கூடும். சேர்த்துக்கொள்ளுங்கள் சேனாபதியை...!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி