Published:Updated:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயரலாம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயரலாம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயரலாம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயரலாம்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று மாலை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த மத்திய அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கையை ஏற்று, அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவைக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

##~~##
தற்போது 72% ஆக இருக்கும் அகவிலைப்படியை 8% கூட்டி 80% ஆக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை அளித்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு இன்று மாலை ஒப்புதல் அளிக்கப்பட்டால், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும், இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.