Published:Updated:

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு!

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு!
வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு!
வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு!

சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை ரூ.40 கோடியில் தூர்வாரப்பட்டு நீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தூர்வாருவதன்மூலம் வீராணம் ஏரியின் கொள்திறன் 146.5 கோடி கன அடியாக உயரும் என்றும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன பரபரப்பளவு உள்ள 25 ஏரிகள் ரூ.15 கோடியில் தூர்வாரப்படும் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

##~~##
மன்னார்குடியி்ல் வடவாறு நீட்டிப்பு கால்வாய் ரூ.23 கோடி செலவில் புணரமைக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் ராமலிங்கம், சிதம்பரம் சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன வசதி மேம்படுத்த புணரமைக்கப்படும் என்றும் 40,469 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் புணரமைக்கப்படும் என்றும் கூறினார்.