Published:Updated:

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 3

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 3
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 3

- கரு.முத்து

ஊழலும் லஞ்சமும் பெருத்த 2006 காலக்கட்டத்தில் பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் வெங்கட்ரங்கன்.கல்வி விஷயத்தில் கவனம் செலுத்திய அவர்,மாணவர் சேர்க்கையில் அவ்வளவாக தலையிடவில்லை.அவருக்கு உதவியாக பல்வேறு ஆட்கள் இருந்தார்கள்.அவர்கள் செய்யும் சேவைக்கு பிரதிபலனாக அவ்ர்களுக்கெல்லாம் நல்ல பதவிகளை தருவார் வெங்கட்ரங்கன்.அவர்களும் அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 3

இவர் சேர்க்கையில் தலையிடாததால் பல்கலையை ஆட்டுவித்தவர் அப்போதைய பதிவாளரான ரத்தினசபாபதிதான் என்கிறார்கள்.ஒட்டுமொத்த பல்கலைகழகமும் இவரின் விரலசைவில்தான் இயங்கியதாம்.துணைவேந்தரை பார்ப்பதற்கு ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.ஆனால் ரத்தினசபாபதியை பார்க்க கூட்டம் அலைமோதும்.வி.ஐ.பி.க்கள் கொடி கட்டிய கார்,ஒருநாளைக்கு பத்தாவது அவர் அலுவலக வாசலில் நிற்காமல் இருக்காது.

சீட் தருவதற்கான அதிகாரம் அவர் கையில் இருந்தது.இவரை வந்து சந்தித்து தொகை கொடுத்தால் சீட் உறுதியாக கிடைக்குமாம்.இதனால் இவரிடம் சீட்டுக்கு அலை மோதினார்கள்.ஒரு கட்டத்தில் இவரது மனைவியை சந்தித்தும் தொகை கொடுத்து சீட் வாங்கிக்கொண்டு போவார்களாம்.

இவர்களோடு இந்த நிலையில் புதிதாக இரண்டு அதிகாரமையங்களும் உருவானது.  அவர்கள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளாரான மீனாட்சி சுந்தரமும், துணைவேந்தரின் உதவியாளரான பாலசண்முகமும். மற்றவர்களை பார்ப்பது கொஞ்சம் சிரமம் என்பதால் காட்சிக்கு எளியவரானவர்களும், பழகுவதற்கு இனிமையானவர்களுமான இவர்களிடம் ஆட்கள் போக ஆரம்பித்தார்கள் வேலை வேண்டுகிறவர்கள்.

துணைவேந்தரின் உதவியாளர் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்று, ஒரு கட்டத்தில் துணைவேந்தரைவிட முக்கியமான ஆளாகிப்போனார் பாலசண்முகம்.
ஆக இணைவேந்தர் எம்.ஏ.எம்.முக்கு நேரடியான புரோக்கர்கள், எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ராஜேந்திரனுக்கு நேரடி புரோக்கர்கள், பதிவாளர் ரத்தினசபாபதிக்கு நேரடி புரோக்கர்கள் என்று மூன்று அதிகார மையங்களூக்கும் புரோக்கர்கள் உருவானார்கள்.

##~~##
அதில் சிவசாமி என்பவர் எம்.ஏ.எ.முக்கு புரோக்கர்.எம்.ஏ. எம். போன் செய்துவிட்டால் போதும் அவர் கேட்கும் கோடிகளை உடனடியாக கொண்டு சென்று கொடுக்கும் அளவுக்கு அதிகாரமாக வளர்ந்தார்.அதை விரும்பாத சிலரால்தான் அவர் கொலையும் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். 2009க்கு பிறகு உடல்நலம் சரியில்லாத வெங்கட்ரங்கன்,இது எதையும் கண்டுகொள்ளாமல் அவருக்கு கிடைக்கும் சில சலுகைகளை மட்டும் பெற்றுக் கொண்டு எம்.ஏ.எம்மும், ரத்தினசபாபதியும் போடச் சொன்ன இடங்களில் கையெழுத்து போடுவதோடு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டார்.உரியவர் சரியில்லாததால் அங்கு தவறுகள் தங்கு தடையின்றி பெருகின.
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 3

ஒரு உதாரணமாக 2011 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வேளாண்மை கல்லூரியில் 120 பேர்தான்.ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் 800 பேர்.பொறியியல் புலத்தில் அங்கீகாரம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 810 பேர்தான். ஆனால் அங்கு அந்த வருடம்  சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 5319.

இப்படி எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை சேர்த்தார்கள். தமிழகத்தை இருப்பிடமாக கொள்ளாத மாணவர்கள் இந்த பல்கலை கழகத்தில் படிக்க முடியாது என்ற விதிகளெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன.வட மாநிலங்களில் கூவிகூவி  ஆள் பிடித்தார்கள் புரோக்கர்கள்.ஒரு பொறியியல் சீட்டுக்கு நிர்வாகத்துக்கு அவர்கள் தந்தது 25,000 ரூபாய்.அவர்கள் வாங்கியது குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.

இப்படி ஆளாளுக்கு சீட் வாங்கித் தருவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தால்  பல்கலைக்கழகம் இந்த கதிக்கு வந்திருக்காது.அடுத்தக்கட்டமாக எதில் சம்பாதிக்கலாம் என்று பார்த்தவர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் நியமனம் செய்தால் இன்னும் அதிகமான அமவுண்டை அடிக்கலாம் என்று கணக்குப்போட்டு அதை செயல்படுத்த துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதாவது 2007 ன் ஆரம்பத்தில் பல்கலைகழகத்திற்கு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த பணிகளை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி கவனித்தார்.புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலையில் வேலை என்றதும் அதற்கு போட்டி ஏற்பட்டது.அதனால் தகுதி உடையவர்களோடு தகுதி இல்லாதவர்களும் களத்தில் இறங்கினார்கள். இருக்கும் வேலை கொஞ்சம் போட்டியோ அதிகம்.அதனால் பணம் கொடுத்தால் வேலை என்ற நிலைமை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டது.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 3

இன்று ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலுக்கான அச்சாரம் அப்போதுதான் போடப்பட்டது.
சீட் வாங்கித் தரும் புரோக்கர்கள் அத்தனை பேரும் வேலை வாங்கித்தரும் புரோக்கர்களாக மாறினார்கள்.நேரடியாக எம்.ஏ.எம்மை சந்திப்பவர்கள், ராஜேந்திரனை பார்ப்பவர்கள்,ரத்தினசபாபதியை பார்ப்பவர்கள் என்று அத்தனை பேருமே வேலை வாங்கித்தருவதிலும் மும்முரமானார்கள்.இவர்கள் எல்லோருமே தங்களிடம் வருகிறவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான பணிக்கான உத்தரவை வாங்கித் தந்தார்கள்.

வேலை கிடைக்கிறது என்பதால் எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் பல்கலைகழகத்தின் பக்கம் திரும்பினார்கள்.பணம்...பணம் என்று எல்லா பக்கமும் வேலைக்கு பணம் தலை விரித்தாடியது.இத்தனை பேர் இருக்க வேண்டிய இடத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு வழக்கே இல்லாமல் ஆட்கள் பெருகிக் கொண்டே போனார்கள்.அதன் விளைவுதான் சம்பளமே கொடுக்க முடியாத இன்றைய நிலைமைக்கு பல்கலை கழகம் தள்ளப்பட்டது.

எத்தனை பேர்தான் இங்கு வேலை பார்க்க வேண்டும்? ஆனால் எத்தனை பேர் இங்கு வேலை பார்த்தார்கள்? எந்த வேலைக்கு எவ்வளவு தொகை லஞ்சமாக தர வேண்டும்? இந்த பணமெல்லாம் யார் யாரிடம் போனது? இந்த கேள்விகளுக்கு பதில் நாளை...