அலசல்
Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

‘மாண்புமிகு தமிழக முதல்வர், சமுத்திரம் கிராமத்தில் டீ குடித்தார். குடித்ததுடன் மட்டுமல்லாமல், அதற்குக் காசும் கொடுத்தார். அவர் காசு கொடுத்ததற்குச் சாட்சியாக, மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்’ - இது ஏதோ ஸ்ஃபூப் பட வசனமில்லை. நிஜமாகவே, தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்ட செய்தி அறிக்கை. அவரது இந்த திடீர் ‘டீ’ பாசத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் எனச் சிலர் ஆராய்ச்சி செய்து வருகையில், அடுத்தகட்டமாக சில செய்தி அறிக்கைகள் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. 

கம்பேரிஸன் கோவாலு!

• ‘இங்கு சிலர் சூப்பர் ஸ்டார் எனச் சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால், இரவும் பகலுமாக மக்களுக்காக உழைக்கும் எடப்பாடி பழனிசாமிதான் ரியல் சூப்பர்ஸ்டார்’ என முழங்கியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. இப்படிக் கொஞ்சமும் கூசாமல், அதே சமயம் இன்ச் அளவுக்குக் கூட சிரிக்காமல் அள்ளிவிடும் வேலுமணிக்குச் சீக்கிரமே நன்றி தெரிவிப்பு அறிக்கை வெளியாகவுள்ளது.

• இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதன்மை மந்திரியாக இருந்தாலும், அவ்வளவு அலுவல்களுக்கு மத்தியிலும் எழுத்தாணி கொண்டு கிருட்டு... கிருட்டு எனக் கம்பராமாயணத்தைத் தமிழில் ரீமேக் செய்தார் சேக்கிழார். அதற்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றார். அவரின் அயராது உழைப்பைப் பாராட்டி அடுத்ததாக நன்றியறிக்கை வெளியாகும் எனத் தெரிகிறது.

• அவர் ஒரு சிறந்த சமூகசீர்திருத்தவாதி. ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள் நீங்க, அயராது பாடுபடுகிறார். இவர் பேசாத பெண்ணியமே இல்லை. சிறந்த அரசியல்வாதிக்கான வாழும் உதாரணம். இத்தனை சிறப்புகளுக்குரிய வளர்மதி, பெரிய மனதுகொண்டு தமிழக அரசு வழங்கிய பெரியார் விருதை வாங்கிக்கொண்டதற்காக அவருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

• இவர்களின்றி அணுவும் அசையாது இங்கே! கடந்த ஓராண்டு காலமாக கண்ணும் கருத்துமாகத் தமிழக அரசை பேணிக்காத்து, தேவையான சமயங்களிலெல்லாம் அன்பாக வழிநடத்தி, இப்பவோ அப்பவோ என இருக்கும் ஆட்சிக்கான ஆக்ஸிஜன் மாஸ்க்காக செயல்பட்டு, ஒரே நேரத்தில் மய்யம், மாநிலம் என இரண்டு அரசுகளையும் கவனிக்கும் பி.ஜே.பி-க்கும் சீக்கிரமே பாராட்டுப் பத்திரம் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி