Published:Updated:

``கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும்" - இயக்குநர் அமீர் அதிரடி !

ர.ரகுபதி
``கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும்" - இயக்குநர் அமீர் அதிரடி !
``கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும்" - இயக்குநர் அமீர் அதிரடி !

கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள SSM கல்லூரியில் நடந்த சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாள் விழாவில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இயக்குநர் அமீர்  மற்றும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் அமீர், `` கமல்ஹாசன், நடிகர் திலகம் சிவாஜிபோல் நடிப்பிலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல் அரசியலிலும் தற்போது தமிழகத்தின் புதிய நம்பிக்கையாகவும் இருக்கிறார். அடுத்த தலைமுறையை முன்னேற்றுவதற்குக் கமல்ஹாசன் பெரிய நம்பிக்கையாக இருப்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. காசு பணம் புகழ் இவற்றையெல்லாம் தாண்டி மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். கிராமசபை என்பதை இன்று தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்து, விழிப்பு உணர்வைக் கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்கள். அதில் எல்லா தடைகளையும் தகர்த்த கமல் ஹாசன் முன்னேறுவார். கமல்ஹாசன் சொல்வதை மிகச்சரியாகத் தமிழகம் கேட்டு நடந்தால் பத்து வருடம் பின்னோக்கி இருக்கும் தமிழகம் முன்னோக்கிச் செல்லும். முதல்வர் பதவியை நோக்கியது அல்ல அவரின் பயணம், அது தமிழக மக்களின் நலத்துக்கான பயணம்" என்று முடித்தார்.