Published:Updated:

`என்ன செய்தாலும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்!’ - தங்க தமிழ்ச்செல்வன்

செ.சல்மான் பாரிஸ்
`என்ன செய்தாலும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்!’ - தங்க தமிழ்ச்செல்வன்
`என்ன செய்தாலும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்!’ - தங்க தமிழ்ச்செல்வன்

`முதலமைச்சரை மாற்றிவிட்டு ஆட்சித் தொடர வேண்டும் என்பதுதான் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது இல்லை’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

`என்ன செய்தாலும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்!’ - தங்க தமிழ்ச்செல்வன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆண்டிபட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றுதான் தெரிவித்திருந்தேன். ஆனால், சில ஊடகங்களில் 18 எம்.எல்.ஏ-க்களின் தீர்ப்புக்காகப் போராட்டம் நடத்தப்போவதாகத் தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள்மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால்தான் ஜெயலலிதா இறப்புகுறித்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார். அதுபோலத்தான், துணை முதல்வர் பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனைச் சந்தித்தது பற்றி வெளியிட்டோம். இதில் அரசியல் காரணங்கள் இல்லை. 

முதலமைச்சரை மாற்றிவிட்டு அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே 18 எம்.எல்.ஏ-க்களின் விருப்பமாகும். சுயேச்சை எம்.எல்.ஏ-வான தினகரனுக்குப் பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள். தற்போதைய ஆட்சியில் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிய ஆட்சி கொடுப்போம் என்பது தினகரனுடைய நிலைப்பாடு. வரும் இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும். அதன்பின் இரண்டும் இணைந்து அம்மாவின் ஆட்சியைத் தொடர்வோம். துணிச்சல் இருந்தால் தேர்தல் அறிவிக்கட்டும். 

நீதிமன்றத் தீர்ப்புக்குப்பின் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். இ.பி.எஸ், ஓ.பி.எஸ், வீரமணி, தங்கமணி, உதயகுமார்  ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை அ.தி.மு.க-வில் இருந்து நீக்க வேண்டும். உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்காததால், சசிகலாவை நீக்கியதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளனர். என்னதான் செய்தாலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்" என்றார்.