Published:Updated:

பிரதமரை அமைச்சர் தவறாக வழி நடத்த முடியுமா என கருணாநிதி கேள்வி

பிரதமரை அமைச்சர் தவறாக வழி நடத்த முடியுமா என கருணாநிதி கேள்வி
பிரதமரை அமைச்சர் தவறாக வழி நடத்த முடியுமா என கருணாநிதி கேள்வி
பிரதமரை அமைச்சர் தவறாக வழி நடத்த முடியுமா என கருணாநிதி கேள்வி

சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ. ராசா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, பிரதமரை அமைச்சர் எவ்வாறு தவறாக வழி நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

 ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?

 ஆ.ராசா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப் பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?

அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

##~~##
 கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு உண்மைகளைப் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து போராட்டங்களை நடத்துகிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.