Published:Updated:

ஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா!

ஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா!
ஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா!

ஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா!

ஜெயலலிதாவின் கல்லறையில் ஈ.பி.எஸ் என்ன வாசகம் எழுத வேண்டும் என்று தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா!

அ.தி.மு.க அரசின் ஊழல் ஆட்சியைக் கண்டித்து தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருப்பூரில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டு பேசுகையில், ``தமிழ்நாட்டில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்சி கமிஷன், கலெக்சன், கரப்சன் என்ற முத்தாய்ப்போடு நடைபெறுகிறது. சென்ற முறை அனுமதி மறுத்து பல தடைகளைத் தாண்டி நீதிமன்றத்தில் வென்று இக்கூட்டத்தை நடத்துகிறோம். கொங்கு மண்டலத்தில் நான் பேசி 5 ஆண்டுகள் ஆயிற்று. எடப்பாடிகூட கொங்கு மண்டலம் என்பதில் எனக்கு ஓர் ஆதங்கம். 1927-ல் இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஏன் கல்வியில் பின்தங்கி உள்ளனர் என்று ஆராய சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தியர்கள் எவரும் அதில் உறுப்பினர் இல்லாத காரணத்தால் அப்போதைய காங்கிரஸ் அதனை எதிர்த்தது. அன்று பெரியார், அம்பேத்கர் அதை ஆதரித்தனர். சைமன் கமிஷனுக்கு எதிராக அப்போதைய சென்னை மாகாண முதல்வர் சுப்பராயன் சைமன் கமிஷனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அது தோல்வியடையவே தன் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அப்போது பெரியார்தான் சாதி ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்று கூறி கடிதத்தை வாபஸ் பெற செய்தார். அப்படிப்பட்ட கொங்குமண்டலத்தைச் சேர்ந்த தலைவன் சுப்பராயன் இருந்த பதவியில் எடப்பாடி இருப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

நாங்கள் இன்று ஆட்சியில் இல்லை. கொங்கு மண்டலத்தில் ஒரு எம்.எல்.ஏ-கூட எங்களுக்கு இல்லை. முதல்வர் மேல் ஊழல் புகார் சொல்ல லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெட்டிஷன் போட்டா அவர் டி.ஐ.ஜி.கிட்ட போகச் சொல்கிறார். டி.ஐ.ஜி பாலியல் புகார்ல சிக்கியிருக்கார். சரினு டி.ஜி.பி-கிட்ட போனா அவர் குட்கா ஊழல்ல லஞ்சம் வாங்கி சி.பி.ஐ விசாரணையில் இருக்கார்.

என்மேல்கூட 2ஜி வழக்குப் போட்டார்கள். ஆனால், அதை நிரூபிக்க பதவியை ராஜினாமா செய்து இன்று குற்றவாளி இல்லை என்று நிரூபித்திருக்கிறேன். அந்த அம்மா (ஜெயலலிதா) மாதிரி 20 வருஷம் ஒரே கேஸை இழுத்தடிக்கலை. 

தமிழ்நாட்டுலதான் எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர்னு எல்லோரும் ஊழல் பண்றாங்க. இப்போ கோர்ட்டும் சி.பி.ஐ விசாரணை வைக்க சொல்லிருச்சு. மானமுள்ள ஆளா இருந்தா ஈ.பி.எஸ் பதவி விலகட்டும் பார்ப்போம்.  

குட்கா ஊழல், முட்டை ஊழல், போலீஸ் வாக்கிடாக்கி ஊழல், பருப்பு ஊழல், நிலக்கரி ஊழல்னு எல்லாத்துலயும் ஊழல். நாங்க ஆட்சிக்கு வந்தால் யாரையும் விடமாட்டோம். எல்லோரையும் உள்ளே வைப்போம்.

நம்ம நாட்டுல செல்போன் வசதியை பரவலாக்கியது தி.மு.க ஆட்சியில் என்னுடைய முயற்சியில்தான். பெண்ணுரிமை, திருநங்கைகளின் உரிமை, மாற்றுத்திறனாளிகள் நலன் என்று கருணாநிதி கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். அவரால்தான் சமூகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, அண்ணா, பெரியார், கருணாநிதி என்று அனைவரின் கல்லறை வாசகங்களும் பிரபலமானது. அதுபோல ஜெயலலிதாவின் கல்லறையில் என்ன வாசகம் எழுதுவார்கள். ஈ.பி.எஸ் உண்மையாக மானமுள்ளவராக இருந்தால் 'அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி எங்கள் அம்மா இங்கே உறங்குகிறார்' என்று எழுதுங்கள். 

கருணாநிதி தன் ஆட்சி பெரியார், அண்ணா வழி என்றார். அதுபோலவே அம்மா வழியில் ஊழல் ஆட்சி என்பது போல அம்மா வழியில் ஆட்சி என்கிறார் ஈ.பி.எஸ்" என்று ஆவேசமாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு