Published:Updated:

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)
சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

சென்னை: மறைந்த தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் பா.சிவந்தி ஆதித்தன் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.சிவந்தி ஆதித்தன், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தன் உடலுக்கு இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

இதே போல் நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிவந்தி ஆதித்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
 

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

மேலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் அஞ்சலி (படங்கள்)

நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், அஜீத்குமார், டி.ராஜேந்தர், சிவகுமார், விவேக் நடிகை குஷ்பு, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.