Published:Updated:

சிறுமி கற்பழிப்பு: போலீஸ் மீது பிரதமர் கோபம்

சிறுமி கற்பழிப்பு: போலீஸ் மீது பிரதமர் கோபம்
சிறுமி கற்பழிப்பு: போலீஸ் மீது பிரதமர் கோபம்
சிறுமி கற்பழிப்பு: போலீஸ் மீது பிரதமர் கோபம்

டெல்லி: டெல்லியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பேராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல என பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் தெஜிந்தர் கன்னாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

##~~##
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அவர் ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதும், அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் தன்னை மிகவும் வேதனையடையச் செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னைக்கு ஆழமான தீர்வு காண்பதும் அதற்காக சமூகம் தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்வதும் அவசியம் என பிரதமர் கூறியுள்ளார்.