Published:Updated:

‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’- மது பாட்டில்கள் மூலம் பிரசாரம் செய்யும் ம.பி அரசு

‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’- மது பாட்டில்கள் மூலம் பிரசாரம் செய்யும் ம.பி அரசு
‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’- மது பாட்டில்கள் மூலம் பிரசாரம் செய்யும் ம.பி அரசு

அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மத்திய பிரதேச மாவட்ட நிர்வாகம்  புது முயற்சியை கையாண்டுள்ளது. 

‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’- மது பாட்டில்கள் மூலம் பிரசாரம் செய்யும் ம.பி அரசு

அடுத்த வருடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றன. தேசிய கட்சிகளாக காங்கிரஸ், பாஜக போன்றவை தங்களின் தேர்தல் வியூகத்தை இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன. மற்றொரு புறம் மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களிலும் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’- மது பாட்டில்கள் மூலம் பிரசாரம் செய்யும் ம.பி அரசு

இந்நிலையில் தொடர்ச்சியாக வரவுள்ள தேர்தலை எதிர்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்கள் தங்களின் பணியைத் தொடங்கிவிட்டனர். அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜாபுவா என்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் ‘வாக்களிப்பது அனைவரது கடமை. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்’ என்பது போன்ற வாசகங்களுடைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கடைகளுக்குக் கலால் துறை இந்த ஸ்டிக்கரை விநியோகம் செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க மேலும் பல திட்டங்களை அம்மாவட்ட அரசு மேற்கொண்டு வருகிறது. நவம்பர் மாதம் 28-ம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.