Published:Updated:

ஜாபர் அலிக்காக குரல் கொடுக்கும் மு.மு.க.!

ஜாபர் அலிக்காக குரல் கொடுக்கும் மு.மு.க.!
ஜாபர் அலிக்காக குரல் கொடுக்கும் மு.மு.க.!

புதுக்கோட்டை: திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாபர் அலிக்காக, முஸ்லிம் முன்னேற்ற கழகம் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

ஜாபர் அலிக்காக குரல் கொடுக்கும் மு.மு.க.!

சமீபத்தில் நடந்த புதுக்கோட்டை நகர கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஜாபர் அலி வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. கரை வேட்டியுடன் வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த ஆளுங்கட்சியின் நகர செயலாளர் பாஸ்கர், ஜாபர்அலியை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, தகராறும் செய்தனர்.

##~~##
இது தொடர்பாக, ஜாபர் அலி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, திருச்சி சிறையில் அடைத்தனர். ஜாபர் அலி எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இருப்பதால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜாபர் அலிக்காக தற்போது களத்தில் குதித்திருக்கிறது.
புதுக்கோட்டை நகர் முழுவதும் காவல்துறையை கண்டித்து போஸ்டர் அடித்தும் ஒட்டியிருக்கிறார்கள். இதற்கு அடுத்த கட்டமாக விரைவிலேயே போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.
வீ.மாணிக்கவாசகம்