Published:Updated:

‘நாங்களே முறையாக விசாரிப்போம்!’ - நெடுஞ்சாலைத் துறை வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீ்டு

‘நாங்களே முறையாக விசாரிப்போம்!’ - நெடுஞ்சாலைத் துறை வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீ்டு
‘நாங்களே முறையாக விசாரிப்போம்!’ - நெடுஞ்சாலைத் துறை வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீ்டு

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் திட்டங்களில் பெரும்பாலான டெண்டர்கள் முதல்வரின் சம்பந்தி, உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல்செய்துவந்தனர். இதனிடையே, முதல்வரின் கீழ் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காது என ஆர்.எஸ் பாரதி கூடுதல் மனுவைத் தாக்கல்செய்ய, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தசரா விழாவுக்காக 10 நாள்கள் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறைக்குப் பிறகு இன்று முதல்நாள் என்பதால், நீதிமன்றம் கூடியவுடனேயே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கைத் தாக்கல்செய்துள்ளது. அதில், ‘முதல்வர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முறையாக விசாரணை நடத்தும் ஒரு அமைப்பாகத்தான் இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை இருந்துவந்துள்ளது. இந்த வழக்கில் நாங்களே முறையாக விசாரணை நடத்துவோம். இதில் சிபிஐ தலையீடு என்பது தேவையற்றது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்த வாரமே விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.