Published:Updated:

ஜேபிசி வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:பா.ஜ.க வலியுறுத்தல்

ஜேபிசி வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:பா.ஜ.க வலியுறுத்தல்
ஜேபிசி வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:பா.ஜ.க வலியுறுத்தல்
ஜேபிசி வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:பா.ஜ.க வலியுறுத்தல்

புதுடெல்லி: 2ஜி விவகாரத்தில், பிரதமர் மற்றும் அமைச்சர் சிதம்பரத்திற்கு நற்சான்று வழங்கும் விதமாக வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் , நாடாளுமன்ற கூட்டுக்குழு தயாரித்த வரைவு அறிக்கையை, உறுப்பினர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தி்ல கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 2 ஜி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பிரச்னை எழுப்புவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

##~~##
2ஜி விவகாரத்தில், பிரதமர் மற்றும் அமைச்சர் சிதம்பரத்திற்கு நற்சான்று வழங்கும் விதமாக வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டு மக்களை ஏமாற்றுவதாகவும், எனவே இந்த வரைவு அறிக்கையை அனைத்து உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுமட்டுமின்றி, டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், நிலக்கரி சுரங்கு ஒதுக்கீடு முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரச்னை கிளப்புவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.