Published:Updated:

பச்சைமாலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பிரமுகரை கொல்ல முயற்சி: குமரியில் பதற்றம்!

பச்சைமாலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பிரமுகரை கொல்ல முயற்சி: குமரியில் பதற்றம்!
பச்சைமாலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பிரமுகரை கொல்ல முயற்சி: குமரியில் பதற்றம்!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாரதிய ஜனதா பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பச்சைமாலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பிரமுகரை கொல்ல முயற்சி: குமரியில் பதற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் எம்.ஆர்.காந்தி. பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

இன்று காலை 6.30 மணியளவில் நாகர்கோவில் ராணித் தோட்டம் பகுதியிலிருந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். பிஷப் ஹவுஸ் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் எம்.ஆர்.காந்தியை அரிவாளால் கழுத்து பகுதியில் வெட்ட முயன்றார்.

ஆனால், அந்த வெட்டு தலைக்கும் கழுத்துக்கும் நடுவே விழுந்தது. இதனால் சுயநினைவின்றி சுருண்டு விழுந்த எம்.ஆர்.காந்தியை அப்பகுதிவாசிகள் நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் உள்ள திலகராம் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள எம்.ஆர்.காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பச்சைமாலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பிரமுகரை கொல்ல முயற்சி: குமரியில் பதற்றம்!

‘‘எம்.ஆர்.காந்தி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பிரபலங்களில் ஒருவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பச்சைமாலை எதிர்த்து போட்டியிட்டவர். அமைதியான மனிதர் என பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படும் எம்.ஆர்.காந்தி, மக்கள் பணிக்காக திருமணமே செய்து கொள்ளவில்லை. கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம், போலீஸ் ஸ்டேசன் என்று மாறி விட்ட அரசியல் சூழல்களில் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்த எம்.ஆர்.காந்தியை வெட்டும் அளவுக்கு விரோதிகள் யாரும் இல்லை’’ என்கிறார்கள் காவல்துறையினர்.

இச்சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

##~~##
பாரதிய ஜனதா பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவத்தை அறிந்தவுடன் ஏராளமான பா.ஜ.க.வினர் மருத்துவமனை வாசலில் திரண்டு விட்டனர். இதனால் பால்பண்ணை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜாதி பிரச்னைகள் இருப்பதுபோல், நாகர்கோவில் பகுதியில் பெரும்பாலும் மதரீதியாகவே பிரச்னைகள் கிளம்பும். எனவே, இப்பிரச்னையும் மதரீதியாக திரும்பி விடக்கூடாது என காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
என்.சுவாமிநாதன்
படம்:
ரா.ராம்குமார்