Published:Updated:

சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்
சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
 

சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அறிவியல் பேராசிரியர் ரோதம் நரசிம்மா, பிரபல ஓவியர் சயீத் ஹைதர் ரசா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விண்வெளித்துறை நிபுணர் சத்ய நாதம் அட்லூரி, உயிரி மருத்துவ ஆராய்சியாளர் மகராஜ் கிஷன் பான், தொழிலதிபர் கோத்ரேஜ் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
 

சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகர், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத், துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற விஜய்குமார் உள்ளிட்ட 38 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
 

சிவதாணு பிள்ளை உள்பட 53 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

மறைந்த ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி டிம்பிள் கபாடியா பெற்றுக் கொண்டார்.

##~~##
பத்ம விருது வழங்கும் விழாவில் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.