Published:Updated:

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

 நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!
 நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சி எழுப்ப உள்ளதால் கூட்டம் சுமுகமாக நடப்பது என்பது கேள்வி குறிதான்.

கடந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது. பிப்ரவரி 26ஆம் தேதி ரயில் பட்ஜெட்டும், 28ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தொடர்  மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

##~~##
இந்த கூட்டத் தொடரில் டெல்லியில் தொடரும் கற்பழிப்பு சம்பவங்கள், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மேலும், மம்தா பானர்ஜியும், மேற்கு வங்க அமைச்சரும் டெல்லி திட்ட கமிஷன் அலுவலகம் முன் தாக்கப்பட்டது தொடர்பான பிரச்னையை எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தக் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்குமா? என்பது கேள்வி குறிதான்.