Published:Updated:

இலவச மடிக்கணினி தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

இலவச மடிக்கணினி தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்!
இலவச மடிக்கணினி தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

விருதுநகர்: விலையில்லா மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இலவச மடிக்கணினி தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பயிலும் 875 மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகளை நேற்று செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், இந்தியாவில் தமிழகத்தை கல்வியில் தலைசிறந்த மாநிலமாக மாற்றிட முதல்வர் கொண்டு வந்த திட்டம் தான் மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் சிறப்புத் திட்டம் ஆகும். தமிழகத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ- மாணவியர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் தான் முதல்வர் இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மடிக்கணினி வழங்க தாமதம் ஆனதற்கு காரணம், மடிக்கணினியின் முக்கிய பாகமான ஹார்டு டிஸ்க் தாய்லாந்து நாட்டின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றங்களின் காரணமாக அங்குள்ள தொழிற்சாலைகள் நிர்மூலமாக்கப்பட்டது. அதன் காரணமாக கணினி தயாரிப்பில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது மடிக்கணினிகள் வரப்பெற்று மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2012- 2013ம் ஆண்டில் 7 லட்சத்து 84 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்க தரமான நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு தற்போது மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும்  மடிக்கணினி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இலவச மடிக்கணினி தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

வசதி படைத்தவர்கள், செல்வந்தர்கள், மிட்டா மிராசுகள் ஆகியோர் மட்டும் பயன்படுத்திய மடிக்கணினிகள் ஏழை, ஏளிய, நடுத்தர குழந்தைகளும் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் வசதி படைத்தவர்கள் மட்டும் பெற்ற உயர் கல்வியை அனைத்து சமுதாய மாணவர்கள் பெற்று சிறந்தோங்க வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் முதலமைச்சர் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி வருகிறார்.

மடிக்கணினிகள் மூலம் மாணவர்கள் கல்வி அறிவை பெருக்குவதற்காகவும், அதன் மூலம் தொழில் நுட்பக் கல்வியின் மூலம் அவர்கள் உயரிய வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே ஆகும். எனவே கணினி அறிவை பெறுவதால் அனைத்து மாணவ- மாணவியர்களுக்கும் உரிய வேலை கிடைப்பதினால் மாணவ- மாணவியர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.

ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து உபகரணங்களை வழங்கி அழியாத கல்வி செல்வத்தை தமிழகத்தில் உள்ள மாணவ சமுதாயம் பெறவேண்டும் என்று நோக்கில் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, காலணிகள், மிதிவண்டி, வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட நூல், மதிய உணவு, பேருந்து பயண அட்டை, மாணவர் இடைநிற்றலை குறைப்பதற்கான சிறப்புத்தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி வழங்கி வரும் முதலமைச்சரின் ஆட்சி பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு பொற்கால ஆட்சியாகும். எந்த நோக்கத்திற்காக முதல்வர்கள் இந்த மடிக்கணினியை மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்" என்றார்.

<table cellspacing="1" cellpadding="1" border="0" align="right" width="0">
    <tbody>
        <tr>
            <td><b><font size="2" face="tahoma" color="#0073c2"><b>##~~##</b></font></b></td>
        </tr>
    </tbody>
</table>
இந்நிகழ்ச்சியில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ரெங்கன் தலைமை வகித்தார். துணை ஆட்சியர் சிறப்பு திட்டங்கள் ஜெயஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் எம்.பாஸ்கரன், எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் சசிரேகா ஆகியோர் நன்றியுரை ஆற்றினார்கள். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.