Published:Updated:

சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததால் 2 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்!

சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததால் 2 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்!
சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததால் 2 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்!

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததில் 2 பேர் காயமடைந்ததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் கோவிந்தராஜநல்லூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு சோழகரம் அரசு மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த, சோழகரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், இது என்ன பாரா? இங்கு ஏன் சரக்கு அடிக்கிறீர்கள்? என்று கேட்டு அடித்திருக்கிறார்.

##~~##
இந்த சம்பவத்தில் சத்தியமூர்த்திக்கு கை ஒடிந்து விட்டது. சங்கருக்கு வயிற்றில் பலத்த அடி விழுந்தது. தற்போது இவர்கள் இருவரும் சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திமடைந்த சங்கரின் உறவினர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காரை அடித்து உடைத்தார்களாம்.
இதில் சங்கர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, இரண்டு ஊர் பொதுமக்களும் சோழகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சிதம்பரம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி, பேச்சு வார்த்தை நடத்தி, முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
க.பூபாலன்