Published:Updated:

பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்: பிரதமர்

பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்: பிரதமர்
பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்: பிரதமர்
பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்: பிரதமர்

புதுடெல்லி: "நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற அரசு அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது இவ்வாறு பிரதமர் கூறினார்.

டெல்லியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படிருப்பது, பெண்களுக்கான பாதுகாப்பில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

##~~##
கல்வி, பொருளாதார ரீதியாக பெண்கள் மேம்பாடு காண அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறிய பிரதமர், சுகாதாரம், கல்வி வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி தருவது அரசின் கடமை என்றார்.