Published:Updated:

நாடாளுமன்ற கூட்டம் இன்று சுமுகமாக நடக்குமா?

நாடாளுமன்ற கூட்டம் இன்று சுமுகமாக நடக்குமா?
நாடாளுமன்ற கூட்டம் இன்று சுமுகமாக நடக்குமா?
நாடாளுமன்ற கூட்டம் இன்று சுமுகமாக நடக்குமா?

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இன்று தொடங்குகிறது. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளதால் கூட்டம் சுமுகமாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கை விவகாரம் மற்றும் டெல்லியில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ அறிக்கையில், மத்திய அரசு திருத்தங்களைச் செய்ததாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்டவைகளை எழுப்ப பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

##~~##
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் முற்றுகையிடப்பட்ட விவகாரத்தை கிளப்ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இலங்கை விவகாரம் மற்றும் கச்சத்தீவை மீட்பது குறித்து விவாதிக்க விதி எண் 193ன் கீழ் விவாதம் நடத்த தி.மு.க. சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மே 10ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.