Published:Updated:

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)
குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

சென்னை: கட்சி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்து வரும் முழு அடைப்பு காரணமாக 35 க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

நாகர்கோவில் நாகர்கோவிலை சேர்ந்த பா.ஜ.க. செயற் குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நேற்று வீட்டில் இருந்து காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். ராணித்தோட்டம் டிப்போவில் இருந்து பிஷப் ஹவுஸ் வழியாக வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் அவரது கழுத்தை வெட்ட அது அவரது தலையில் விழுந்தது. இதில் சுய நினைவின்றி சுருண்டு விழுந்த எம்.ஆர்.காந்தியை அருகில் இருந்தவர்கள் பால்பண்ணை பகுதியில் இருந்த திலகராம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

அங்கு எம்.ஆர்.காந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் உள்ள பா.ஜ.க.வினரை கொந்தளிக்க செய்தது. திலகராம் மருத்துவமனையின் முன்பு கட்சியினர்  குவிந்ததால் பலத்த போலீஸ் போடப்பட்டது.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

இதையடுத்து, உடனடியாக கூட்டம் நடத்திய குமரி பா.ஜ.க., முழு அடைப்பு நடத்துவதாக அறிவித்தது. அதன் படி இன்று காலையில் இருந்து நாகர்கோவில் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மொத்த மாவட்டமும் ஸ்தம்பித்து போயுள்ளது.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

திருவட்டாறு, குலசேகரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மினி பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சொந்தமான 16 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் முழுமையாக உடைக்கப்பட்டன.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

திருவட்டாறு அருகில் உள்ள ஆத்தூர் டிப்போவில் இருந்து வெளியே வந்த பேருந்துகளை பா.ஜ.க.வினர் மறிக்க முயன்றதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அப்போது, சில பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

கேரள மாநிலத்துக்கு சொந்தமான இரண்டு அரசு பேருந்துகள் களியக்காவிளை அருகே உள்ள இஞ்சிவிளை பகுதியில் அடித்து உடைக்கப்பட்டது. இதுவரை 35 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டதாக தகவல் வருகிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயக்கினாலும் மாணவர்களின் வருகை மிக குறைவாக இருக்கிறது. சில கல்லூரிகள் மாணவர்களை  திருப்பி அனுப்பியது. அருணாச்சலா கல்லூரி, கேப் உள்ளிட்ட சில பொறியியல் கல்லூரி வாகனங்களும் தாக்கப்பட்டன. இதனால் மாணவர்களும் மிரண்டு ஓடினார்கள்.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கன்னியாகுமரியில் வந்து குவிந்துள்ளனர். கூட்டம், கூட்டமாக செல்லும் பா.ஜ.க.வினர் திறந்திருக்கும் கடைகளுக்கு சென்று எம்.ஆர்.காந்தி எவ்வளவு நல்ல மனிதர் என்று தெரியும் தானே? இந்த தாக்குதலுக்கு நமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டாமா? கடையை பூட்டுங்க அண்ணாச்சி! என்று வித்தியாசமாக கூறி வருகிறார்கள்.
 

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு: 35 பேருந்துகள் உடைப்பு (படங்கள்)

முழு அடைப்பையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார் எஸ்.பி.மணிவண்ணன்.    தமிழகத்திலேயே பா.ஜ.க. வலுவான மாவட்டம் என்பதாலும், சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள மாவட்டம் என்பதாலும் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தை கவனத்துடன் கையாள்கிறது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.

##~~##
மத ரீதியான மோதலாக மாறி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் நடுநிலையாளர்கள். தாக்குதல் நடத்தியவர்களை கண்டு பிடித்தால் தான் ஓயும் போலிருக்கிறது போராட்ட அலை!
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.ஆர்.காந்தியின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்.சுவாமிநாதன்

படங்கள்:
ரா.ராம்குமார்